ADVERTISEMENT

சிங்கமாவது… புலியாவது… அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். விஜய் மதுரை மாநாடு வேற… ஒரே கூட்டமா இருந்துச்சு. விஜய் சிங்கத்தோட கம்பேர் பண்ணி பேசிட்டாராம்.

உடனே அங்க இருந்த புலிக்கட்சி காரங்க… “எதே சிங்கமா… காட்டுக்குள்ள புலிக்கும் சிங்கத்துக்கும் நடந்த சண்டையில் ஒருபோதும் சிங்கம் ஜெயிச்சதே இல்ல தெரியுமா உனக்கு? எப்பவுமே புலிக்கு பலம் அதிகம்”னு விஜய் கட்சிக்காரங்கள பாத்து பேசுனாங்க.

ADVERTISEMENT

இரண்டு தரப்புக்கும் எப்பவும் சண்ட வெடிக்கலாம். டீக்கடை சுக்குநூறா பறக்கலாம்ங்குற மாதிரி இருந்துச்சு.

அப்போ அங்க இருந்த பெரியவர் ஒருத்தர்.. “டேய் டேய் நிறுத்துங்கடா… அங்க காட்டையே அழிச்சி, கேரளாவுக்கு மரத்தையும் கல்லையும் கடத்திட்டு இருக்காணுங்க… இவனுங்க என்னான சிங்கம் புலினு சண்ட போட்டுக்கிட்டு… போங்க அந்த பக்கம்”னு ரெண்டு குரூப்பையும் அங்க இருந்து விரட்டி விட்டாரு…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Saravanan Annadurai

ADVERTISEMENT

க்ரீஸ் டப்பாவிற்கு இப்படி ஒரு உபயோகம் இருக்கிறது என உணர்ந்த நாள்.

#தவெக மதுரை மாநாடு

கடைநிலை ஊழியன்

Fastag-ல் 3,000 ரூபாயில் ஆண்டுக்கு 200 முறை பயன்படுத்தலாம் என கொண்டுவரப்பட்ட திட்டமானது உ.பி.யில் உள்ள 4 விரைவுச் சாலைகளின் சுங்கச் சாவடிகளுக்கு பொருந்தாது, அங்கு தனியே சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும் – செய்தி…

மத்திய அரசு டூ மக்கள் : எப்படி ஏன் புத்தி பாத்தியா?

காவ்யா

ஒரு வேல.. இந்த பன்ச் டயலாக் எல்லாம் பேரரசு எழுதி குடுத்துருப்பாரோ..

திருப்பாச்சி, சிவகாசி படத்துல பன்ச் னு நினைச்சு எழுதுன டயலாக் மாதிரியே இருக்கு..

mohanram.ko

வீக்கெண்டில் தூங்குபவர்களுக்கு 20% இதய நோய் குறைகிறது…

நான் வீக் டேஸ் லியே நல்லா தான் தூங்குவேன்..

லாவண்யா

அப்பா இடம் கிடைச்சிருச்சு பா…

எந்த காலேஜ் டா….

காலேஜா? தவெக மாநாட்டுல ப்பா…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

அடேங்கப்பா.. தெருநாய்களை அகற்றனும்னு தீர்ப்பு சொன்னதுக்கே இந்த பொங்கு பொங்கறாங்களே, தெருவுல திரியற மாடுகளை எல்லாம் புடிச்சுட்டு போக சொன்னா, உச்சநீதிமன்றத்தை உயிரோட விடுவாங்கன்னு நினைக்கறியா நீயி..?

கண்ணதாசன்

நண்பன் : முத்தம் கொடுக்க போறேன்…

மீ : யாருக்கு?

நண்பன் :மரத்துக்கு?

மீ : ஏதே!!!

கடைநிலை ஊழியன்

“சிங்கம் சிங்கிளா தான் வரும்” என்ற ரஜினி டயலாக்கை காப்பி அடித்து விட்டதாக ரஜினி ரசிகர்கள் புகார்..

Vivekanandan Ramadoss

ஜீவகாருண்யம் பேசுறவங்கள நம்பலாம்..ஆனா Selective கருணையா நாய்க்கு மட்டும் கருணை, பசு மாட்டுக்கு மட்டும் கருணைன்னு பேசுறவங்கள மட்டும் நம்பவே கூடாது..

நாய்க்கு இருக்க உரிமை கோழிக்கோ, ஆட்டுக்கோ கிடையாதா? KFC கடையின் முன்பு போராட்டத்தை நடத்துவார்களா dog lovers?

தமிழ்நாட்ல இருக்க Dog lovers எல்லாம் Foreign breed நாயை வளர்க்குறதுக்கு பதிலா உள்ளூர் நாட்டு நாயான தெரு நாய செல்லப்பிராணியா வளர்த்தா வளர்ப்பு செலவும் குறையும்..தெருநாய் சிக்கலும் குறையும்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share