ADVERTISEMENT

ஐயா… டீ குடிக்க ஒரு கூட்டமா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru memes and trolls april 9

இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன்…. அங்க டீ குடிக்காம, ஒரு 5,6 பேரு ஏதோ பேசிட்டு இருந்தாங்க… நானும் பொறுத்து பொறுத்து பாத்தும் அவங்க டீ வாங்குற மாறி தெரியல…

நானே போயி… ’என்னய்யா கூட்டம், அப்படி எத பத்தி பேசிட்டு இருக்கீங்க’னு கேட்டேன்…

ADVERTISEMENT

”என்ன டீ குடிக்கலாம்னு டிஸ்கஸ் பண்ணிட்டிருக்கோம்”னு சொல்லி ஷாக் கொடுத்தான் ஒருத்தன்.

அடப்பாவிகளா, எதுக்கு அனைத்துக் கட்சி கூட்டம் போடனும்னு யோசிக்க, சிஎம் இன்னைக்கு போட்ட கூட்டத்தையே ஓவர்டேக் பண்ணிட்டங்களேடா…

ADVERTISEMENT

எப்படியோ போங்கனு நா டீ குடிச்சிட்டு வந்துட்டேன்…. update kumaru memes and trolls april 9

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 9

கோவிந்தராஜ்

எதுக்கு பா இப்ப சர்பத் விலைய ஏத்துறுக்கிங்க…

ADVERTISEMENT

பேப்பர் பாக்கலையா கேஸ் விலை ஐம்பது ரூவா ஏறிடுச்சு…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ ன்னு சொல்றவனை கூட நம்பிறலாம்.

‘நாளைல இருந்து ஸ்வீட் சாப்பிட மாட்டேன்’
‘நாளைல இருந்து நொறுக்கு தீனி சாப்பிட மாட்டேன்’ ன்னு சொல்றான் பாரு,

அவனை மட்டும் நம்பவே கூடாது..

Black cat

பிளெமிங் மாம்ஸ் டூ டீம் ~

அந்த பையன் Priyansh Arya ஒரே ஆளா 9 six அடிச்சுருகான்

ஆனா நீங்க மொத six 10 வது ஓவர் ல அடிச்சுட்டு…மேலும் எல்லாம் சேந்து மொத்தம் 8 சிக்ஸ் தா அடிச்சிருக்கீங்க

CSKvsPBKS

iQKUBAL

When the wife returned from her mom’s home:~

வீடு ரொம்ப சுத்தமா, கிளீனா இருக்கு.. அந்த perfection தான் எங்கேயோ இடிக்கிது.. 😂😂😂

கடைநிலை ஊழியன்

டேய்.. எங்க டா இவ்ளோ அவசரமா போற..

நாளைக்கு தீபாவளி ல.. அதான் வெடி வாங்க போறேன்..

ஏரியா அங்கிள் ~ அவரு எவ்ளோ சொன்னாலும் இவனுங்க திருந்த மாட்டாங்க போல…

கடைநிலை ஊழியன்

ஏற்கனவே, cup யாருக்கு னு decide பண்ணிட்டாங்க பா..

இந்த IPL லே வெறும் eyewash..

ஆர்சிபி ஃபேன் ~ நீ சிஎஸ்கே ஃபேன் தானே?

ஜான்சன்

ஒரு துண்டு தேங்காயை திருடிய எலிக்கு விஷம் வைக்க கற்றுத்தந்த நம்முடைய மூளை, கோடிக்கணக்கில் திருடுபவனுக்கு ஓட்டு போடாதே என கறுக் கொடுக்க மறந்து விட்டது..

✒️Writer SJB✒️

நாளைக்கு உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வரட்டுமா ?

இப்ப வேணாம் அம்மாவுக்கு நல்ல வசதியான மாப்பிள்ளை வேணுமாம்,,

கல்யாண வயசுல மகள் நீ இருக்கும்போது உங்க அம்மாவுக்கு எதுக்கு இப்போ இரண்டாம் கல்யாணம்?

அடேய்…!!!!

ஷாஜகான்


தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியை எப்போ தருவீங்க ?

ஜி~ ஆமாம் ராமனின் நெற்றியில் சூரிய ஒளி விழும் ராமநவமி நாளில் நான் தமிழ்நாட்டில் ராமர் பாலத்தை தரிசித்தேன்..!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share