ADVERTISEMENT

மார்க்கெட் நல்லா தானே இருக்கு? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க போனா எல்லோரும் வழக்கத்துக்கு மாறா ரொம்பா சீரிசா பேசிட்டு இருந்தாங்க…

கொஞ்சம் பக்கத்துல போயி உக்காந்து என்னனு கேட்டா, “மார்க்கெட் சரிஞ்சிருச்சி, மார்க்கெட் கவுந்துருச்சி, மார்க்கெட் விழுந்துருச்சினு பேசிட்டு இருந்தாங்க.

ADVERTISEMENT

அவங்க கிட்ட, ‘இல்லயண்ணே, வரும்போது மார்க்கெட்ல கூட்டம் நல்லா தானே இருந்துச்சி… ஜனங்க காய்கறிலா வாங்கிட்டு போய்ட்டு இருக்காங்க… நீங்க எந்த மார்க்கெட் சொல்லுறீங்க… கோயம்பேடா, இல்ல சைதாபேட்டை மார்க்கெட்டா’னு கேட்டேன்.

கடுப்பாகி கிளம்பிட்டாங்க… என்னவா இருக்கும்? update kumaru memes and trolls april 7

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls april 7

நல்லவன்

ADVERTISEMENT

வக்பு வாரிய சட்டத்திருத்தத்தில எல்லாமே அரசு கண்ட்ரோல்ன்னு சொன்னதுக்கு கை தட்டுன சங்கீஸ்தான்,

அரசு கன்ட்ரோல்ல இருக்குற கோயிலை பூராம் “எங்களிடம் திரும்பக்கொடு” ன்னு கேட்டுட்டு இருக்காங்க..

என்னங்கடா நியாயம் இதெல்லாம்..?!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

கொள்கைக்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்கிற நிலைப்பாட்டில் தைரியமாக இருப்பவர் சீமான் ~ அண்ணாமலை புகழாரம்.

தம்பிகள் ~ யோவ் எங்களுக்கு தெரியாம அப்படி என்ன கொள்கை வைச்சுருக்க..?

திரள்நிதி வசூலிக்கறது ~ சீமான்

ச ப் பா ணி

பெட்ரோல், டீசல் விலை இரண்டு& சமையல் எரிவாயு விலை ரூபாய் 50 உயர்வு

பொருளாதாரம் உயரும்னு பாத்தா விலைவாசி தான் உயருது.

Mannar & company™🕗

உலகத்தையே கண்ணால் பார்க்கிற கண்ணுக்கு ஒரு தூசி விழுந்தால்

அதை அந்த கண்ணால் கூட பார்க்க முடியாது, ஏன்னா டிசைன் அப்படி!!

Joe…😎😎

பெட்ரோல், டீசல்க்கான கலால் வரியை ரூ. 2 உயர்த்தியது.

ஜீ ~ கவலைப்படாதீங்க, பெட்ரோல் டீசல் ரேட்டை கூட்ட மாட்டேன்..

சூப்பர் ஜீ..

ஜீ ~ அதுக்குப்பதிலா சிலிண்டர் விலையை ரூ 50/- கூட்டிருக்கேன்..

mannavan

எனக்கும் சீமானுக்கும் வித்தியாசம் இல்லை – அண்ணாமலை

ஆமா அவர் வீடியோல நடிப்பாரு,

இவரு வீடியோவை ரிலீஸ் பண்ணுவாரு..

Mannar & company™🕗

கணவனோட எல்லா செயலுக்கும் ‘react’ பண்ணினாத்தான் மனைவிக்கு மரியாதை,
மனைவியோட எல்லா செயலுக்கும் ‘act’ பண்ணினாத்தான் கணவனுக்கு மரியாதை!!

vanmam

ஆரம்பத்துல அப்படித்தான் இருக்கும்..

போகப்போக நல்லா இருக்குமா..?

அதான் இல்லை, படம் இப்படித்தான் இருக்கும்னு பழகிரும்..

#TEST

ச ப் பா ணி

மற்ற நாட்களில் ‘ஓவர் டைம்’ பார்த்தும்

Monday அன்னிக்கு ‘ஓவராடைம்’ மட்டும் பார்த்து நேரம் போகும்.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share