சத்தியம் தவறாத உத்தமன் : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தப்ப அங்க நம்ம நண்பர் வழக்கம் போல, சோதனை மேல் சோதனை ரேஞ்சுல டீயக் குடிச்சிட்டு இருந்தாரு.

அவருகிட்ட போயி என்னனு கேட்டா, “இல்ல மச்சான், குடிய நிப்பாட்ட முடியல… பொண்டாட்டியும் தெனமும் திட்டுறா… கஷ்டமா இருக்கு… அதான் அவ மேலேயே ‘இனி குடிக்கவே மாட்டேனு’ சத்தியம் பண்ணிட்டு வந்துட்டேன்”னு சொன்னாரு.

சரி… அதுக்கு எதுக்கு சோகமா இருக்க? னு கேட்டதுக்கு, ”மணி 7 ஆயிடுச்சி.. கை நடுங்குது… அதான் பச்சக்கடைக்கு போறேனு சொல்லிட்டு கெளம்பிட்டாரு.

அப்போ தான் புரிஞ்சது… இவரு எதுக்கு சத்தியம் பண்ணிருக்காருனு… update kumaru memes and trolls april 4

நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes and trolls april 4

Joe…😎😎

அன்புமணி நேரடியாக ஆதரித்தது ~

CAA சட்டம்,
NRC சட்டம்,
வேளாண் சட்டம் ,

மறைமுக ஆதரவு ~

வக்பு வாரியம் சட்ட மசோதா வாக்கெடுப்பு புறக்கணிப்பு,

மோடிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் புறக்கணிப்பு,

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்புல புறக்கணிப்பு,

பாஜக போன்ற எதிரியை விட ஆபத்தானவர்கள், பாமக போன்ற துரோகிகள்.

கடைநிலை ஊழியன்

தமிழக பாஜக புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை ~ அண்ணாமலை

இதெல்லாம் தெரிஞ்சு தான், கூட்டணி வச்சா நா பதவி விலகுவேன் னு சொல்லிருக்காப்பிடி..

ArulrajArun

அடுத்த மாநிலத்திற்கு கவர்னர் பதவி ஆள் தயார்படுத்துவதற்காகவே தமிழ்நாட்டில் கட்சி நடத்துறாங்க போல .

✒️Writer SJB✒️

மாதச் சம்பளம் என்பது மனைவி எனும் டீ கப்புக்குள் நுழைந்த பிஸ்கட் மாதிரி

உள்ள போகும் ஆனா திரும்பி வராது..!

https://twitter.com/siva_somu_mc/status/1907991809285837230

முனியம்மா

உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாய் இருப்பது உங்கள் எதிரிகள் அல்ல

நான் நினைப்பதை செய்ய முடியுமா முடியாதா என்று உங்கள் மனதில் தோன்றும் சிறு பயம் தான்.

ச ப் பா ணி

நெருப்பு மாதிரி இருந்தால்
ஈஸியா எல்லாரும் குளிர்காய்ஞ்சுட்டு போயிடுறாங்க

Mr. Vetti
உலகத்துல எல்லாருக்கும் சேலம் மாம்பழம் பேமஸ்னு தெரியும்

ஆனா சேலத்துல மாம்பழமே இல்லைனு
சேலத்தானுக்கு மட்டும் தான் தெரியும்

Sasikumar J
கல்யாணம் ஆகலன்னா மட்டும் பேச்சுலர் இல்ல;

பொண்டாட்டி ஊருக்கு போனாலும் பேச்சுலர் தான்…!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share