இன்னைக்கு டீக்கடைக்கு கத்திக்கிட்டே வந்த மச்சான் ’போங்கடா போய் ஆர்சிபி வாழுங்க’னு வித்தியாசமா ஆசீர்வாதம் பண்ணிட்டே வராரு..
என்ன மச்சானு கேட்டா… ஒன்னும் இல்ல.. ‘கடுப்பேத்திட்டே இருக்கானுங்க… அதான் போங்கடா போய் ஆர்சிபி மாறி இருனு அனுப்பி வச்சிட்டேன்.
பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் கப் அடிக்காம வருஷா வருஷம் ஆர்சிபி கெளம்புதோ… அதே மாறி அவங்களும் போகட்டும்னு சொல்றேன்.
சரி.. நீ நாளைக்கு ஏதோ டான்ஸ் காம்பேட்டிசன் இருக்குனு சொன்னியே… ஆசீர்வாதம் எதும் பண்ணட்டுமானு எங்கிட்ட கேக்குறாரு…
ஆகா இது என்னாடா ஆர்.சி.பிக்கு வந்த சோதனைனு ’வர்றேன் மச்சான்’னு கெளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
அன்னையின் பிள்ளை ❤️
ஞாயிற்றுக்கிழமை வெஜிடேரியன் சமைச்சி சிக்கனம் பண்ணிட்டேன் …!
நைட்டுக்கு மட்டும் பீசா ஆர்டர் போட்டிருக்கேன்…!
கணவன் மைண்ட் வாய்ஸ் – என்னா மனுஷி யா
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பாஜக தலைவர்கள் பி லைக்:
வாக்குப்பதிவு முடிஞ்ச அடுத்த நிமிசத்துல இருந்து ‘வாக்காளர் பட்டியல்ல தப்பு நடந்துருக்கு, வாக்குபதிவு நடந்த நாள் சரியில்லை, வெயில் அதிகம்..’ன்னு நம்ம எல்லாரும் ஒரே மாதிரி ஒப்பாரி வைக்கனும்..
கடைநிலை ஊழியன்
வாழ்க்கைல பிரச்சனையே வர கூடாது னு நினைக்குறது தான்,
பலபேர் கிட்ட இருக்குற பெரிய பிரச்சனையே !!
கிச்சா
இப்பலாம் RCB மேட்ச் பாக்கதான் இன்ட்ரஸ்ட்டா இருக்கு.
மத்த டீம்லாம் எப்டி ஜெயிக்கிறாங்கனு பாக்க ஆவலா இருக்கும்.
ஆனா இவனிங்க எப்டி டிசைன் டிசைனா தோக்குறாங்கனு பாக்க தான்
பக்கா என்டர்டெய்ன்மென்ட்டா இருக்கு…
கிச்சா
அங்க பாரு டேபிள்டாப்ல இருக்கவனே ஒரு கலர் ஜெர்சில ஆடறானுக….
இவனுக பாதாளத்துல தூர்வார்றதுக்கு எத்தனை கலருல ஜெர்சி வெச்சிருக்கானுக பாரு…
இனி இப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!! pic.twitter.com/kR5tU9SgNU
— Mannar & company™🕗 (@Anvar_officia) April 21, 2024
சரவணன். ????
தேர்தல் பத்திர திட்டத்தை மாற்றம் செய்து கொண்டு வருவோம்! – நிர்மலா சீதாராமன்!
அப்படி என்ன மாற்றம் பண்ண போறீங்க?
நிர்மலா ~ நீதிமன்றம் தலையிட முடியாதுன்னு கொண்டு வருவோம்..
கடைநிலை ஊழியன்
வாக்கு சதவீதத்தயே இத்தனை தடவ மாத்துறாங்க னா..
ஜூன் 4 ஆம் தேதி.. ரிசல்ட் அன்னைக்கு சொல்லவா வேணும்..
ℳsd இதயவன்
பிராட்மேனே பொறந்து வந்து RCB க்கு ஆடினாலும்… ஜெயிச்சுருவாங்களா
அதான் இல்ல ஏன்டா மறுஜென்மம் எடுதாதோம் னு அவரையே பீல் பண்ண வைச்சிருவாங்க..
#KKRvRCB
@Kirachand4
தேர்தல் ஆணையத்தின் களப்பணி சரியாக இல்லை! – அண்ணாமலை
இந்த கம்ப்ளைன்ட்ட நீங்க ‘ஜி’கிட்டல்ல சொல்லணும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
RCBvsKKR : ஒரு ரன்னில் பரிதாப தோல்வி… ஆபத்தில் ஆர்சிபி அணியின் பிளே ஆஃப் கனவு!
‘தலைவர் 171’ பட டைட்டில் டீசர் ரிலீஸ்… லோகேஷ் வைத்த ட்விஸ்ட்!