இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அப்போ ஒருத்தரு அங்கிருந்து கிளம்பினாரு. அவருகிட்ட, “ப்ரோ அந்த பக்கம் போகாதீங்க, போலீஸ் நிக்குது வித்தவுட் ஹெல்மட் பைன் போட்றாங்கனு” சொன்னேன்.
உடனே அவரு, “நல்லவேள சொன்னிங்க, ரொம்பா தாங்ஸ் தல. நா யூடர்ன் அடிச்சு போயிட்றேன்’னு வண்டிய திருப்பினாரு.
அப்போ தான் அவரு பைக் பின்னாடி எழுதியிருந்த வாசகத்தை பாத்து ஷாக் ஆயிட்டேன். அதுல, ’பயம் அறியா மன்னர் வகையறா’னு போட்டுருந்துச்சு.. டைமிங்கானு தெரியல, டீக்கடை ரேடியோல ‘ச்சீ ச்சீ ச்சீ’னு பாட்டு ஓடுது.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 16

திருப்பூர் சாரதி
அரசுப் பள்ளிக் குழந்தைகள், இப்போ எவ்வளவு அழகா இந்தி பேசுதுங்க தெரியுமா?
அவிங்கெல்லாம் இங்கே வேலைக்கு வந்திருக்கும் இந்திக்காரங்களோட குழந்தைங்கடா!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பால் பொங்கி வருதான்னு பாத்துட்டே இருந்து கடைசி நொடில ‘டப்’ன்னு ஸ்டவ்வை ஆஃப் பண்றதுல, பல தடவை நம்மை திட்டு வாங்க வைச்ச ஸ்டவ்வை பழி வாங்கின ஒரு சைக்கோத்தனமான சந்தோசம் ஒளிஞ்சுருக்கு..😈

iQKUBAL
அவுங்களுக்கு உன் கூட பேச நேரம் இல்லைன்னு நீ நெனைப்ப..
ஆனா அவுங்களுக்கு உன் கூட பேச விருப்பம் இல்லைன்றது தான் உண்மை..

வசைப்பாடி
டெல்லிக்கு மோடி, தமிழ்நாட்டுக்கு நான்; பாஜகவுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது’ – எடப்பாடி
கூட்டணியே இல்லனு சொன்னீங்க அது மாதிரி தானே? ~ மக்கள்

வேல் முருகன்
ஒரு நல்ல மனைவி எப்பொழுதும் கனவனை மன்னித்துவிடுவாள்,
அவள் பக்கம் தப்பு இருந்தால்..
நான் சொல்லல, அறிஞர் மில்டன் பியர்லி சொன்னது!

பொன் வண்டு
உள்ளதில சிறந்த புகைப்படத்தைத்தான்
பெண் வீட்டுக்கு அனுப்பினேன்…
வந்ததில் சிறந்த புகைப்படத்தைத்
தேர்வு செய்திருப்பார்கள் போல…
பதில் இல்லை..!”

Joe…😎😎
’பாஜகவுடன் கூட்டணி மட்டுமே; கூட்டணி ஆட்சி கிடையாது’- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
நாங்க ரெண்டு பெரும் லவ் மட்டும்தான் பண்ணுவோம், மத்தபடி எங்களுக்குள்ள ஏதும் கிடையாதுன்னு சொல்ற மாதிரி இருக்கு.

கண்ணதாசன்
”சாட்டை வலையொளிக்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை” – நாதக சீமான்
ஒருவேள அண்ணன பத்தி வீடியோ இறக்கப் போறாறோ?