இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தோம். பக்கத்துல சின்ன பசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தாங்க.. திடீர்னு சண்ட, என்னனு பாத்தா ரெண்டு பேரு ‘நான் தான் டா கேப்டன்‘னு மாறி மாறி சொல்லி சண்ட போட்டுட்டு இருந்தாங்க…
இத பாத்துட்டு இருந்த நண்பர், “இவங்க சண்டய பாத்தா, எனக்கு ராமதாஸ் – அன்புமணி, இபிஎஸ் – ஓபிஎஸ், ரோகித் சர்மா – ஹர்திக் பாண்டியா நியாபகம் ஆட்டோமேட்டிக்கா மண்டைக்குள்ள வருது மாப்ள’னு சொல்லிட்டு சிரிக்குறாரு.
‘யோவ், வாய மூடிட்டு அமைதியா வாயா’னு இழுத்துட்டு வந்துட்டேன். update kumaru memes and trolls april 12
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 12

சரவணன். 𝓜
திமுகவுக்கு முடிவுகட்ட தான் புதிய தலைவர்..” – தமிழிசை சௌந்தரராஜன்.
~ அப்ப இவ்ளோ நாளா தலைவரா இருந்தவங்கலாம் புடுங்கினதெல்லாம் தேவையில்லாத ஆணி தானா?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பெருசா ஒன்னும் ஆசை இல்லை சார்.. CSK Cheer Girls மாதிரி எந்த வேலையும் செய்யாம சம்பளம் வாங்கிட்டு போற வேலை ஒன்னு கிடைச்சா போதும்!

புலிகேசி
அமித்ஷா எவ்வளவு குள்ளநரித்தனம் பண்ணியும் அந்த கட்சியை பிரிக்க முடியல மாமா..
சூப்பர் மாப்ள..! அதிமுகவையா சொல்ற..?
அதிமுகவா..? த.மா.க வை சொல்றேன் மாமா.. கட்சில ஜி.கே.வாசனை தவிர யாரும் இல்லாததால பிரிக்க முடியாம ஏமாந்து திரும்பி போயிட்டாருன்னு சொல்ல வந்தேன் மாமா..

சரவணன். 𝓜
இன்றைய SRH மேட்ச் பார்த்துக் கொண்டு இருக்கும் சிஎஸ்கே டீம்
~ ஓகோ.. சேசிங் ன்னா இப்படித்தான் விளையாடணுமா?

vaalu
செருப்பு வாங்கி தந்த நயினார் நாகேந்திரன்
அண்ணாமலை ~ மைண்ட் வாய்ஸ் நவ் :
நல்ல வேளை கிஃப்ட் பாக்ஸ் ல செருப்பு இருந்தது, சாட்டை இருந்துருந்தா என்ன ஆகியிருக்கும்!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒருத்தன் என்னடான்னா 245 அடிக்கறான், சேஸ் பண்றவன் 3 ஓவர்ல 40 ரன் அடிக்கறான்..
சிஎஸ்கே தவிர மரம் நடனும், மக்கள் சுவாசிக்க காற்று வேணும்னு சுற்றுச்சூழல் மேல எவனுக்காவது அக்கறை இருக்காடா..?

balebalu
சென்னையின் கோடை கால பாடல் :
வெய்யில் தன் வேலையை காட்டுதடி
காலையில் வேதனை கூட்டுதடி
வேதனை சொல்லிடும் வியர்வையிலே
வேகுதே என் உடல் வெய்யிலிலே 😫
லாக் ஆஃப்
