தலைவர மாத்திட்டாங்களா? – அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போயி, அங்க ஐபிஎல் பத்தி பேசிட்டு இருந்தோம்.

அப்போ ஒரு இரட்டை இலை பிரியர் ஒருத்தர், ’சிஎஸ்கே தோத்துட்டே இருந்துச்சி, அதான் ருத்துராஜ மாத்திட்டு, மறுபடியும் தோனிய கேப்டனா ஆக்கிட்டாங்க’னு சொன்னாரு

இத கேட்டதும், ‘இந்த அதிமுகவும் தான் எத்தன தேர்தல்ல தோத்துச்சி, எடப்பாடிய தூக்கிட்டு, வேற யாரயாவது உங்க தலைவரா மாத்திருக்கலாம்லா’னு திருப்பிக் கேட்டேன்.

’அதுக்கு அமித் ஷா கிட்டலா கேட்கனும்’னு உதய சூரியன் பிரியர் சொல்லிட்டு சிரிக்குறாரு…

இதுக்கு மேல அங்க இருந்தா சரிவராதுனு கிளம்பிட்டேன்… update kumaru memes and trolls april 10

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes and trolls april 10

✒️Writer SJB✒️

இலங்கையில் இருந்து விமானத்தில் பறந்து வரும் போது இல்லாத ராமர் பாலம் மோடி கண்ணுக்கு தெரியும் போது

இந்தியாவில் விமானத்தில் பறக்கும் போது இருக்கும் மணிப்பூர் ஏன் அவர் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது..?

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

பாஜக மாநில தலைவருக்கான போட்டியில் இருந்து விலகிய அண்ணாமலை

அப்படின்னா இனிமே வாழ்க்கைல செருப்பு போடவே முடியாதா..?

வல்லவன்

ஏன்னே நாதஸை அறைஞ்சீங்க..?

பின்ன என்னப்பா..? மாநில தலைவர் இடத்துக்கு போட்டி போட கட்சில 10 வருஷம் இருந்துருக்கனும்னு சொல்றாங்களே, பத்து வருசத்துக்கு முன்ன தமிழ்நாட்டுல பாஜகன்னு ஒரு கட்சி இருந்துச்சான்னு கேட்கறாம்ப்பா..

கரியான்சட்டி

கஷ்டம் என்பது லஞ்ச் டைம் மாதிரி டிபன் சாப்பிட்ட நாலு மணி நேரத்தில் வந்துடும்

சந்தோசம் என்பது டின்னர் டைம் மாதிரி லஞ்ச் சாப்பிட்டு 8 மணி நேரம் கழிச்சு தான் வரும்..!

பூவேந்தன்

Good – இன்னிக்கு நைட் த்ரிஷா படத்துக்கு போகலாம்

Bad – படம் பாத்துட்டு நேரா வீட்டுக்குதான் வரனும்

Ugly – இன்னிக்கு நைட் உப்புமா

நாகராஜசோழன் MA_MLA

அடிக்குற வெயில்ல ஜீஸ் கடையை தேடுனா 2K கிட்ஸ்!

டீ கடையை தேடுனா 90s கிட்ஸ்!

செen Balan

அண்ணாமலை: அப்பா மாதிரி நினைச்சேன். பதவியை புடுங்கிட்டாங்க.

அன்புமணி : இங்க அப்பாவே பதவியை புடுங்கிட்டாரு… போவியா..

Alíén 👽

மாநிலத்தலைவர் ஆகப் போட்டியிட 10 வருசம் கட்சி உறுப்பினராக இருக்கவேண்டும்.

நயினாருக்கு செக்!

லட்டுல வெச்சேன்னு நினைச்சியா நட்டுல வெச்சேன் – அண்ணாமலை

syed

டேய் லாரி சங்கம் இப்பவாவது வாயை திறங்கடா டீசல் விலை 102 ரூவாவை கடந்திருச்சு….

Lorry Owner Association ~ காங்கிரஸ் வரட்டும் கேட்ருவோம்😷👍🏼

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share