இன்னைக்கு சாய்ந்தரம் டீக்கடைக்கு போனா, வழக்கம்போல சினிமா கதைய பேசாம, சூடா ஐபிஎல் ஏலத்த பத்தி, அந்த டீமோட ஓனர்ஸ விட ரொம்ப விலாவரியா பேசிட்டு இருக்காங்க…
இத கூட ஏத்துக்கலாம்.
ஆன, டீயவே 1/2 போட்டு அக்கவுண்ட்ள குடிக்குறவைங்க எல்லாம், ‘அர்ஸ்தீப்லாம் ஒரு ஆளா.. இவனுக்கு 18 கோடியா… பந்த் எல்லாம் பந்து பொறுக்கி போட தான் லாய்க்கு’னு வாய்க்கு வந்தபடி பேசிட்டு இருந்தாய்ங்க பாரு…
கேக்க சகிக்கல… டீயே குடிக்காம கிளம்பிட்டேன்.
நீங்க அஃப்டேட்ஸ் பாருங்க…
Sasikumar J
வீட்ல சம்பாதிக்கிறவங்களுக்கு என்ன பிடிக்குமோ
அதை ஞாயிற்றுக்கிழமை வாங்கி சமைச்சது எல்லாம் ஒரு வசந்த் & கோ காலம்…!
Mannar & company™????
90s kids ~ பெத்தவங்களுக்குப் பயந்து நடந்த கடைசித் தலைமுறையும் நாமதான்,
பெத்தப் பிள்ளைகளுக்குப் பயந்து நடக்கும் முதல் தலைமுறையும் நாமதான்!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
டிவியில் கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்பாகும் போது தான்,
வீட்டு ஹாலில் டிவிக்கும் சோபாவிற்கும் இடையில் உள்ள இடத்தை நீண்ட நேரம் அழுத்தி கூட்டி பெருக்கி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் பெண்களுக்கு அதிகமாக வரும்.
மன்னர்
மீ ~ யோவ் ஞாயிற்றுக்கிழமை என்ன அவசரம் அவசரமா போற?!
தட் ஞாயிற்றுக்கிழமை: நான் தண்ணி கேன் போட வந்தவன் சார்!
சசி
நாம ஒன்னு நினைச்சா….?????
தெய்வம் ஒன்னு நினைக்குமா…!
அதான் இல்லையே வீட்ல பொண்டாட்டி, ஆபீஸ்ல மேனேஜர் நினைக்கிறது தான்…!
வாமணன்
ஞாயிற்றுக்கிழமை டெஸ்ட் மேட்ச் மாதிரி பொறுமையா போகன்னும் நம்ம எதிர்பார்ப்போம்
ஆனா அது டி20 மாதிரி சீக்கிரம் போய்விடும்…!
கனகு
இப்பப் போனால் நல்லக் கறி, மீன் வாங்கலாம்ங்கறதுக்கும்,
இப்பப் போனால் அவனைப் பிடித்து கடனை வசூல் பண்ணிடலாம்ங்கறதுக்குமான
போராட்டம்தான் இந்த வாழ்க்கை!
Anvar
புது படத்தை ரிவ்யூ பண்ணலாம்னு இரண்டு நாட்கள் கழிச்சு தியேட்டருக்குப் போனால் படத்தையே தூக்கிட்டாங்க..
என்னடா இது யூடியூபர்களுக்கு வந்த சோதனை!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
ஐபிஎல் 2025 ஏலத்தில் விற்கப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியல்!
மகாராஷ்டிரா முதல்வர் ரேஸில் முந்தும் ஃபட்னாவிஸ்… ஷிண்டேவுக்கு நெருக்கடி!
விழுப்புரம்: அரசு விழாவில் முதல்வரோடு டாக்டர் ராமதாஸ், அன்புமணி? நடப்பது என்ன?