தியேட்டருல ஜாலி… ஆபிஸே காலி : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு விஜய்யோட கோட் படம் ரிலீசாம்… ஆபிசுல நெறய சேரு காலியா கெடந்தது.

என்னனு கேட்டா, ஒருத்தன் கால் வலிங்கிறான், இன்னொருத்தன் முதுகு வலின்றான். இப்படி வயிறு, தலை, கை, கழுத்து ஒரு 10 பேர் இப்படியே காரணம் சொல்லி இன்னைக்கு லீவு போட்டுடாங்க…

அதெப்படி எல்லோருக்கும் ஒரே நாளுல இப்படி ஆச்சினு எதுவுமே தெரியாத மாதிரி எம்.டி. மேனஜர் ரூம்ம பாத்து கேட்குறாரு..

அங்க மேனேஜர் இல்ல… எப்படி இருப்பாரு… 10 பேருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்து கூட்டிட்டு போனதே அவர்தானே…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…


சரவணன். ????

எதுக்குண்ணே அவனை அடிக்கறீங்க?

அண்ணாமலை தான் லண்டன் போயிட்டாரே.. அப்புறம் எப்படி GOAT படம் ரிலீஸ் பண்ணினாங்க ன்னு கேக்கறான் பா..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

செல்பிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.

கரீம்

படம் பார்க்க போறவங்களும் பார்க்கவே போகாதவங்களும் பண்ற ரிவியூஸ் தான் இப்ப வந்துட்டு இருக்கு..

படம் பார்த்தவங்களோட ரிவியூ..?

அந்த ரிவியூ எல்லாம் வர இன்னும் ஒரு வாரம் ஆகுமே..

▶படிக்காதவன்™✍

ஆளே இல்லாம போற பேருந்து
காத்து வாங்கிட்டு இருக்கும் டீ கடை சலூன் கடை’லாம் கூட
நாம போற அன்னைக்கு தான் கூட்டமா இருக்கும்

ஏன்னா நம்ம டிசைன் அப்படி…

கடைநிலை ஊழியன்

இன்ஸ்டா பக்கம் போனா, ஸ்டேட்டஸ் எல்லாம் பிட்டு பிட்டா GOAT வீடியோ இருக்கு.. இப்படியே படத்துல வர எல்லா சீனையும் போஸ்ட் பண்ணிருவானுங்க போல..


James Stanly

₹1000 குடுத்து பஸ்ட்ஷோ போய்ட்டு படத்த பாக்காம வச்ச வாட்ஸப் ஸ்டேட்டஸ் எத்தன பேர் பாத்தான்னு எண்ணிட்டு இருக்கானுங்க.. யார்ரா நீங்க?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share