யாருயா நீங்கல்லாம்? : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு டீக்கடைக்கு போனதும்… டீக்கட பாலு ஒரு வீடியோ காமிச்சான்…

அதுல ஆஸ்திரியா போன பிரதமர் மோடி, அங்க பேசும்போது ‘ஆஸ்திரியாவுக்கு பதிலா ஆஸ்திரேலியானு சொல்ல… மொத்த கூட்டமும் ‘ஆஸ்திரியா… ஆஸ்திரியா’னு சொல்லி கத்துறாங்க…

”ஆமா நானும் பாத்தேன்.. நாட்டு மானத்த வாங்குறாரு மோடி”னு சொல்லிட்டு இருக்கும்போது…

“அட போப்பா… நான்லா இங்கிலீஷயே இங்கீஷூனு வாசிச்சு அடிவாங்குன ஆளு, அதான் நான் பிரதமர் ஆகல போல”னு சொல்லிட்டு அவன் பாட்டுக்கு போறான்.

பிரைம் மினிஸ்டருக்கு சரியா ஸ்பெல்லிங் கூட தெரியாது… இதுல இவரு பிரதமர் ஆகலயாம்…. யாருயா நீங்கல்லாம்?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

கடைநிலை ஊழியன்

லைஃப் ‘ல கஷ்டப்படுற பெண்ணா பாத்து, லைஃப் லாங் அவ கஷ்டப்படாம பாத்துக்கணும்..

நீ படுற கஷ்டதுக்கு, இந்த ஆசை எல்லாம் உனக்கு தேவையா டா..


ச ப் பா ணி

மேனேஜ்மென்ட் கோட்டா என்பது கோவிலில் வி.ஜ.பி தரிசனம் போல..

#பணமிருந்தால் போதும்


மணி

BSNL வாழ்வுதனை ஜியோ கவ்வும்..
மீண்டும் BSNL லே வெல்லும்


✒️Writer SJB✒️

ஒரு சிக்கன் ஃபிரைட் ரைஸ் குடுங்க அஜினோமோட்டோ போடாதீங்க ஹெல்த் ஸ்பாயில் ஆயிடும்…

ஆமா என் வாயை மூடிட்டு பேசுறீங்க..?

ஹாஃப் விஸ்கி சாப்டு இருக்கேன் ஸ்மெல் வரும்..!!!!

வேலு

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா…

ஓ இதனால் தான் நமக்கு ராத்திரில சரியா தூக்கம் வருவது இல்லையா..? அப்ப சரி..!

ஓவர் நைட் ஒபாமா

எரிவாயு கம்பனி கிட்ட பணம் வாங்கிடீங்க ~ திமுக நிர்வாகி

ஏன் நீங்க மட்டும் வாங்கவில்லையா ~ அதிகாரி

மக்கள் ~ தெய்வம் சார் நீங்க மாத்தி மாத்தி உண்மையை சொல்றீங்களே

வித்ஸ்

சும்மா இருக்கும்போதெல்லாம் ஓவர்திங்க் பண்ணாம இருக்கவாச்சும் பிஸியா இருந்தா நல்லாருக்கும்ன்னு தோணும். பிஸியா இருக்கும்போது ஏன் இப்படி நாய் மாதிரி ஓடிட்டே இருக்கோம்ன்னு தோணுது. என்ன டிசைன் இது ????

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

பி.எஸ் 6 மாடலில் 200 புதிய SETC பேருந்துகள் : என்னென்ன வசதிகள் உள்ளன?

“வரி என்ற பேச்சுக்கே இடமில்லை” : யார் இந்த வீரன் அழகுமுத்துக்கோன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share