இன்னைக்கு ரேஷன் கடையில போய் அப்பா பொங்கல் பரிசு வாங்கிட்டு வர சொன்னாரு.
பொங்கல் பரிசு 1000 ரூபாய அமுக்கிரலாம்னு ஆசையோட ரேஷன் கடைக்கு போனேன்.
பச்சரிசியும் வெல்லமும் தான் கொடுக்குறாங்கன்னு அங்க போன பிறகு தான் தெரிஞ்சது.
வீட்டுக்கு போனபிறகு அப்பாக்கிட்ட, “இந்த வருஷம் 1000 ரூபா கிடையாதான்னு” கேட்டேன்.
“கொடுத்தா நானே போய் வாங்கியிருப்பேன். உன்னைப் போய் ஏன் வாங்க சொல்ல போறேன்னு” அப்பா சொல்றாரு…
ஒரே அசிங்கமா போச்சு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.

நெல்லை அண்ணாச்சி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்
த.வெ.க. போட்டியில்லை. …..விஜய்
-பயந்துட்டியா…குமாரு
கோழியின் கிறுக்கல்!!
நமக்கு பிடித்த மாதிரி இருப்பதற்கும்,
மற்றவர் எதிர்பார்ப்பது போல் இருப்பதற்குமான போராட்டமே வாழ்க்கை எனப்படுவது!!

mohanramko
டூர் ஏதாவது போய் ஜாலியா இருந்து இருக்கயா?
இல்லவே இல்லைங்க
குடும்பத்து கூட நேரம் செலவழித்து இருக்கயா?
அய்யய்யோ, சுத்தமா இல்லைங்க
பிடிச்ச விஷயத்தை செய்து இருக்கயா?
இல்லவே இல்லைங்க
அப்புறம், என்ன வெங்காயத்துக்கு, 90 மணி நேரம் கஷ்டப்பட்டு வேலை செய்து பணத்தை சம்பாதிக்க போற?….

ச ப் பா ணி
நம்ம hot star subscribe செய்யும் போது நெப் ப்ளிக்ஸ்ல நல்ல படங்கள், தொடர்கள் வரும். நம்ம நெட்பிளிக்ஸில் சேரும்போது ஹாட் ஸ்டாரில், சோனியில் நல்ல தொடர்கள் படங்கள் வரும்
-போங்கடா
ச ப் பா ணி
பேரத்தில் விலை குறைய குறைய
பொருளின் குறைகளே நினைவுக்கு வருகின்றன.

நெல்லை அண்ணாச்சி
ரஜினி வாழ்க்கையை படமாக்க விருப்பம்..
டைரக்டர் ஷங்கர்
# கருப்பன்….குசும்பன்..
” கடனாளி ” யாக்க
பாக்குறான்…!!
Sasikumar J
என்ன ஆபீஸ்க்குள்ள வந்தா ஏதோ கல்யாணம் மண்டபதுகுள்ள வந்த மாதிரி ஒரு பீலிங்கா இருக்கு எல்லாருமே வேட்டி சேலையில இருக்காங்க அதுக்குள்ள பொங்கல் வந்துடுச்சா…!
-Pongal2025
mohanram.ko
21-ம் நூற்றாண்டில் இந்தியா நம்பமுடியாத வேகத்தில் முன்னேறி வருகிறது’’ – பிரதமர்
நிஜமாவா?
அதான் சொன்னேனே…
நம்ப முடியாது ன்னு
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏ.ஆர். ரஹ்மான் இப்படியா? – பிரபல பாடகர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
விளம்பர தூதரை வெளிய போகச் சொல்லுங்க… ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுத்த லீகல் வார்
நல்லவேளை அபராதம் போடாம விட்டாங்க… கோர்ட்டில் குட்டுப்பட்ட பாஜக
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: எலான் மஸ்கின் இலவச இணைய சேவை!
பியூட்டி டிப்ஸ்: சிறிய மார்பகங்களைப் பெரிதாக்க நினைக்காதீர்கள்!
ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு கொண்டவரா நீங்கள்?