~அண்ணே.. சால்வை போட்டு மரியாதை செலுத்த வந்திருக்கோம்..
~ அந்த ஈரவெங்காயமெல்லாம் வேணாம்.. பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல.. பணமா இருந்தா மட்டும் சொல்லு..

பாக்டீரியா
~எத வச்சு ஜீ’யை பீடைன்னு சொல்றீங்க..?
~பீடைன்னு சொன்ன உடனே ஜீ உன் மைண்ட்ல வராரு பாரு அதை வச்சு..!

ℳsd ❝இதயவன்❞
“காக்கா, கழுகு கதைகளால் எந்தப் பயனும் இல்லை” – நடிகர் லெஜெண்ட் சரவணன்
ஒரு படம் ஓடினதும் கருத்து சொல்ல ஆரம்பிச்சுட்டிங்கல்ல?!


mohanram.ko
பள்ளி மாணவர்கள் – கல்நெஞ்சக்காரங்க, இவ்வளவு மழை பெய்யுது. லீவு விடறாங்களா பாரு
https://twitter.com/Cat__offi2/status/1726615633461420300?t=pyuM7yXAVvVhKKN-Cgt_jg&s=08
ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, ” நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக “I LOVE YOU” என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
ஒரு பெண்… இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர் : ” நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு “I LOVE YOU” என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது” என்றார்.
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே…. உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
நபர் 11 : யார் இது… என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
உங்கள் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் 🤪🤪🤪🤪🤪🤪🤪 pic.twitter.com/n1RGcVwWvW
— ஆந்தைகண்ணன் (@cinemascopetaml) November 21, 2023
balebalu
ஆன்லைன் ல மாடு விக்குறாங்க ன்னு சொன்னதை கூட ஒத்துக்கலாம் ஆனா
ஆண்டுக்கு 500 கோடி லாபம் ன்னு அடிச்சு விட்ட பாரு
அதை மட்டும் மன்னிக்கவே முடியாது
#பசுமைவிகடன்

Kirachand
இஸ்ரேலின் அராஜகத்தை நிறுத்துங்கள்! – எடப்பாடியார்
உனக்கு பிரதமர் போஸ்ட் கண்ஃபர்ம் தலைவா!

butterfly.
வெளில கிளம்பும்போது செப்பல் மறக்காம மாட்டிக்கிறது எப்புடி பழக்கத்துக்கு வந்துச்சோ,
அதே மாதிரி டூவிலரை எடுக்கபோகும் முன் கை ஹெல்மெட்டை தூக்குச்சினா,
நாம நமக்கும்,இந்த சமுதாயத்துக்கும் பாதுகாப்பான வாழ்க்கையை அமைச்சு குடுத்துருக்கோம்னு அர்த்தம்!
