ஒரு வழியா ஜி20 மீட்டிங் இன்னையோடு முடிஞ்சிருஞ்சு… குடியரசு தலைவர் அளித்த விருந்து நிகழ்ச்சியில காவேரி டேபிளில் முதல்வர் ஸ்டாலினுக்கு விருந்து கொடுத்துருக்காங்க…சும்மாவே காவேரி தண்ணீர் பிரச்சனையில எதிர்க்கட்சிகள் திமுகவை விடமாட்டாங்க…முதல்வர் ஸ்டாலின் டெல்லியில காவேரி டேபிளில் இருந்து சாப்பிட்டதுக்கு என்னென்ன சொல்ல போறாங்களோ…
சரி இன்னைக்கு சண்டே….ரொம்ப அரசியல் வேண்டாம்…ஜாலியா அப்டேட் பாருங்க…
சிதறல்கள்
வயலோடு வாழ்ந்தோம் வாழ்க்கை நன்றாக இருந்தது அப்பப்ப இபப புயலோடு வாழ்கிறோம் ஏரியில் கட்டின வீடுகள் மூழ்கி விடுகின்றன

குருநாதா
ஞாயிறு, காதலியின் வருகை போல இருந்தாலும் திங்கள், மனைவியின் கைகளில் வெளக்கமாறு போல காத்திருக்கிறது…!!!

தெனாவட்டுதமிழச்சி (முத்தழகு)
ஞாயிற்றுக்கிழமை அசந்து தூங்கும் போது பக்கத்து வீட்டு கரிகுழம்பு வாசனை தூக்கத்தை கெடுக்குமாம்

ச ப் பா ணி
SMS என்பது OTP பார்ப்பதற்கு மட்டும் என்றாகிவிட்டது

ச ப் பா ணி
எனக்குன்னு வந்து பொறந்திருக்கு பாருனு சொன்னால் மதர் எனக்குன்னு வந்து வாச்சிருக்கு பாருனு சொன்னால் மனைவி
லாக் ஆஃப்
