ஒரு வாரமாவே லியோ படம் பத்தியும் அதோட கலெக்ஷன் பத்தியும் தான் இணையம் முழுக்கவே பேச்சா இருக்கு… ஒரு பக்கம் படம் ஃபிளாப்புன்னும் இன்னொரு பக்கம் படம் பக்கா மாஸூனும் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க…
இதுக்கு மத்தியில தான் நாளைக்கு லியோ படத்தோட வெற்றி விழா சென்னையில நடக்குது…ஆடியோ லாஞ்ச் தான் மிஸ் ஆகிடுச்சி…வெற்றி விழாவுல தளபதியோட அரசியல் எண்ட்ரீ அறிவிப்பு இருக்கும்னு பேசிட்டு இருக்காங்க…சரி… நாளைக்கு விஜய் என்ன அரசியல் பேசுறார்னு பார்ப்போம்…இப்போம் நீங்க அப்டேட் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
பழங்குடியினர் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன..
மோடிஜி….பெருமிதம்…!!!
# …for example ..மணிப்பூர்

black cat 2
கோவா ப்ளானையே 20 வருசமா போடும் உனக்கு , தாய்லாந்து விசா தள்ளுபடி எதற்கு..??

ச ப் பா ணி
மனைவியின் ‘எங்க என்னப் பார்த்து சொல்லுங்க’ என்பது நவீன உண்மை அறியும் சோதனை

தர்மஅடி தர்மலிங்கம்
முழு நேரமாக ஆளுநரை திட்டும் திமுகவை கண்டிக்கிறேன்! – அண்ணாமலை!
அதுக்காக.. இப்படி ‘பார்ட் டைமா’ வந்து கண்டிக்கிறது..?!

லிட்டில் கிருஷ்ணா
Me to God…. leo fleshback story fake-னு சொன்ன மாதிரி
என்னோட Freshback (past) story-யும் Fake-னு சொல்லிட்டீங்கனா நல்லா இருக்கும்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்ன?
மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜக நோக்கம்: முதல்வர்
