நண்பன் ஒருத்தனுக்கு போன் பண்ணி “தீபாவளி பர்சேஸ் எல்லாம் எப்படி போகுதுனு” கேட்டேன்.
அதற்கு அவரு ரொம்ப சலிப்பா “அதை ஏன் நண்பா கேட்குற…தீபாவளிக்கு வெடி வாங்கனும்னு 1000 ரூபாய்க்கு டூவிலர்ல பெட்ரோல் போட்டுட்டு சிவகாசி போய் 500 ரூபாய்க்கு தான் வெடி வாங்கிட்டு வந்தேன். வெளியில சொன்னா சிரிக்கிறாங்கனு” சொன்னாரு.
அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு தீபாவளி வாழ்த்துக்களும் சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Kirachand
அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார்! – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு
இந்த விஷயம் எடப்பாடி அண்ணனுக்கு தெரியுமா?
கடைநிலை ஊழியன்
7 வருசத்துக்கு முன்னாடி பணமதிப்பிழப்பு அறிவித்த அப்ப என்ன நினைச்ச..
சங்கி & கோ – நாட்டுல கருப்பு பணம் ஒழிய போகுது னு நெனைச்சேன்.
mohanram.ko
காபி ஆர்டர் பண்ணியிருக்கேன், இப்ப வந்துடும்
ஸ்விக்கியிலா?
புருஷன் கிட்ட
சரவணன். ????
நாட்டில் வறுமையை பாஜக அரசு ஒழித்து வருகிறது – பிரதமர் மோடி.
நல்லா ஒழிச்சுச்சு போ.
கோழியின் கிறுக்கல்
பவர் பேங்கும் பழைய போனும் போலவே பிரிக்க முடியாதது,
புதுமணத் தம்பதிகள்!!
மயக்குநன்
மொத்த கட்சியும் சிறையில் அடைக்கப்பட்டால், ஆட்சியும் சிறையில் இருந்துதான் நடக்கும்!- ஆம் ஆத்மி.
கட்சியின் செயற்குழுவானது ‘ஜெயில்’குழுவா மாறிடும்னு சொல்றாங்க போல..?!
ச ப் பா ணி
மனைவியை தனிமையில் திட்டுபவனும்..
பொதுவெளியில் திட்டு வாங்காதவனும் கணவனே இல்லை
நல்ல கேள்வி 😢😢😢 pic.twitter.com/udmuj5tUPG
— ஒபாமா (@prabhu65290) November 8, 2023
balebalu
Medical miracle ன்னு தான் இதுவரை கேள்வி பட்டிருப்போம்
ஆனா இன்னிக்கு நடந்தது நிஜமாவே கிரிக்கெட் miracle
#AUSvAFG
James Stanly
ஊர்ல எவ்ளோ பிரச்சனை போய்ட்ருந்தாலும் நீ ரசத்த ஊத்துனு ஜாலியா இருக்கது இந்த 2 குரூப்தான்..
1.பிக்பாஸ்
2.என் மண் என் மக்கள்
Zen Selvaa
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முதல் நாள் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது – அண்ணாமலை
இரண்டாவது நாள் சாமி சிலைகளே இருக்காது
ச ப் பா ணி
பேசித் தீர்க்க முடியாத பிரச்சனையென்று ஏதுமில்லை..
அடேய் நான் பேசினதால தான் அவகூட பிரச்சனையே.
https://twitter.com/Kaviit7P/status/1722283606327128201
நம்பமுடியாத செயல். கடலில் ஒரு படகைக்கண்ட திமிங்கிலம்,அதில் ஒரு இளைஞன் உள்ளதை பார்த்தபின் தன் வாயில் ஒரு ஆமையை கவ்விக்கொண்டு அப்படகில் ஏறும் ஏணியில் கொண்டுவந்து சேர்த்த பின் தான் இருந்தால் அவ்விளைஞன் அதை காப்பாற்ற முன் வரமாட்டான் என்று அறிந்து அவ்விடத்தை விட்டு அகன்றது.
அதன்பின் அவ்விளைஞன் அந்த ஆமையை படகின் மேல் கொண்டு வந்து சோதனை செய்கையில் அதன் கழுத்தில் இரண்டு கயிறுகள் இறுக்கி ஆமை மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அறிந்தான். பின் கத்தியினால் அந்த கயிற்றை அறுத்து ஆமை மூச்சு விட செய்து பின் கடலிலேயே அவன் அந்த ஆமையை விடுவித்தான்.
இதை கவனித்து நோக்கினால் மாமிசத்தை உணவாக உட்கொள்ளும் சுறாமீன், மனிதனால் மட்டுமே மற்ற உயிரனங்களை காப்பாற்ற முடியும் என்பதை அறிந்துள்ளது.
இதை நன்கு உணர்ந்து மனிதன் செயல்பட்டால் மட்டுமே இவ்வுலகை காப்பாற்ற முடியும்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
பெரியார் சிலை அப்புறப்படுத்தப்படுமா?: அண்ணாமலைக்கு திமுக, அதிமுக பதில்!
டிஜிட்டல் திண்ணை: 2 நாளில் முடிந்த ரெய்டு, 5 நாள் இழுத்தது ஏன்? வேலு வீட்டில் நடந்தது என்ன?