அக்கா ஒரு ஐடியாவோட வந்துருக்கு போல : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

இன்னைக்கு மோடி 3வது தடவையா பிரதமர் ஆகுறாரே… பாக்கலாம்னு டிவிய போட்டேன்.

பாத்தா அதுல தமிழிசை அக்கா அண்ணாமலை பேர மட்டும் சொல்லாம கிழி கிழினு கிழிச்சிட்டு இருந்துச்சி.

என்னா விஷயம்னு பக்கதுல இருந்து அண்ணாமலை விசிறி கிட்ட கேட்டதுக்கு சொல்றாரு… ”ஆளுநர் பதவிய விட்டு தேர்தல நிக்கு போதே.. தமிழிசை கிட்ட ஜெயிச்சா மந்திரி பதவி, தோத்தா கட்சி மாநில தலைவர் பதவின்னு யாரோ சொல்லிருப்பாங்க போல…

அதான் இந்தம்மா தர்ற பேட்டி எல்லாம் பார்க்கும் போது, எப்படியும் தோக்க போறோம்னு முன் கூட்டியே தலைவர் பதவிக்கு பிளான் பண்ணி தயாரா வந்துருக்க மாதிரியே இருக்குனு” சோகமா சொன்னாரு..

அதுசரி… அக்கா ஒரு முடிவோட தான வந்துருக்கு போல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க

????எனக்கொரு டவுட்டு!?

இருபது வயசுல கஷ்டமே தெரியாம இருக்குறதும் முப்பது வயசுக்கு மேல சந்தோசமே தெரியாம இருக்குறதுதான் வாழ்க்கை..

Image

தேசிங்கு

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண் to மணமகன்;

எனக்கு இப்போ எக்ஸாம் எழுதனும் போல தோணுது

#TNPSC_GROUP4

Mannar & company™????

கிளாம் பாக்கம்
கேளம் பாக்கம்
கீழம் பாக்கம்
களம் பாக்கம்
திளாம் பக்கம்
இதெல்லாம் பிற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளில் நடத்துனரிடம் டிக்கெட் எடுக்கும்போது கிளாம் பாக்கத்துக்கு கேட்கப்படுபவை!

a_Y????G’யன்

தேர்தலில் நில்லாமல் ஒவ்வொரு முறையும் அமைச்சர் ஆவதால் “இனி நீங்கள் நிற்காத சீதாராமன் என அழைக்கப்படுவீர்கள்” ???? !!!

Kirachand
நான் பாஜகவில் சேரப்போறேன் அண்ணே!
ஏன்டா?
அங்கதான் தேர்தலில் போட்டியிடாமலேயே அமைச்சர் ஆகிடலாமே!


கடைநிலை ஊழியன்

ஒர்க் அவுட் பண்ணுனா உடம்பு குறையும் ‘ங்கிறது நம்பிக்கை..

ஜிம்முக்கு போனா உடம்பு குறையும் ‘ங்கிறது மூடநம்பிக்கை..

Babu

நீட் தேர்வு முறைகேடானது – இந்தியாவின் மற்ற மாநிலங்கள்//

அடப்பாவிகளா… இதையே இப்ப தான் கண்டுபிடிச்சிங்களாடா – தமிழ்நாடு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

மோடி 3.0 : பதவியேற்ற அமைச்சர்களின் முழு பட்டியல் இதோ!

T20 WorldCup : டாஸ் வென்றது பாகிஸ்தான்.. இந்திய அணி பேட்டிங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share