உப்பே இல்லாம ஊறுகாவா? :அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘அண்ணே, உப்பே இல்லாம ஊறுகா போடமுடியுமா?’ன்னு ஆஃபீஸ் போற வழியில தம்பி ஒருத்தன் கேட்டான். நான் கூட வீட்டு சமையல்ல தான் எதோ பிரச்னை இருக்கும்னு நெனச்சுகிட்டு, ‘தம்பி, உன் பொண்ணாட்டி பாவம்டா, வீட்டு வேலையும் பாத்துகிட்டு ஆஃபீசும் போய்கிட்டு தங்கச்சி ரொம்ப கஷ்டப்படுறா, கொஞ்சம் சமையல் அப்பிடி இப்பிடி இருந்தா கூட அட்ஜஸ்ட் பண்ணுப்பா’ன்னு சொன்னேன். ‘அட நீங்க வேற, எங்க வீட்டு சாப்பாடில எல்லாம் ஒரு சிக்கலும் இல்ல. பிரச்னை நாட்டில தான் இருக்கு’னு சொன்னான். என்ன ஆச்சுன்னு கேட்டா, ‘அண்ணே, நிதி அமைச்சரே இல்லாம பொருளாதாரம் பத்தின ஆலோசனைக் கூட்டம் நடத்துறாங்க. அதத் தான் ஒரு உதாரணத்த சொல்லி கேட்டேன்’ன்னு சொன்னான். ‘அப்பா தம்பி, நீ சொல்றது சரி தான். ஆனா உன் உதாரணம் தான் சரி இல்லப்பான்னு சொல்லிட்டேன்’. நீங்களே சொல்லுங்க ஒரு குடும்ப தலைவி ஊறுகா போட்டது ஒரு தப்பா? பாவம் இல்லே, அவங்க வீட்டில இருக்குறவங்களுக்கும் பசிக்கும் இல்லே. ‘அத சொல்லியே எவ்வளவு நாள் தான் கிண்டல் பண்ணுவாங்க. அவங்களே கலாய்க்க எவ்வளவு கண்டென்ட் குடுத்திருக்காங்க’னு அவனுக்கு அறிவுரை சொல்லிட்டு அந்நியன் அம்பி மாதிரி பெருமையா கிளம்பி ஆஃபீஸ் வந்திட்டேன். நீங்க அப்டேட்ட படிங்க.

ADVERTISEMENT

**கோழியின் கிறுக்கல்**

வயது ஏற ஏற பிடிக்காததையும் ஏற்றக் கொள்வதற்கு பெயர் தான் பக்குவம்!!

ADVERTISEMENT

**Naveen Kumar**

பொய் பேசுவது மற்றவரிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள.

ADVERTISEMENT

உண்மை பேச வேண்டும் என்பது நம்மிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள.

**கடைநிலை ஊழியன்**

பொறுமையுடன் இருங்கள் !!

பொறுமையாகவே இருந்துவிடாதீர்கள் !!

**செல்வமணி**

அசத்தும் ஜெகன்மோகன் ரெட்டி…!

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினால், ஆண்டுக்கு ரூ.15000 வழங்கப்படும் என அறிவிப்பு..

கல்வி கற்பிக்க ஒரு மாநிலம் படாத பாடுபடுது.. ஆனா இங்கே மதுவின் விற்பனையை பெருக்க படாத பாடுபடுது

**இதயவன்**

`மகாத்மா காந்தி விரும்பியதை மோடி நிறைவேற்றுகிறார்!’ஸ்மிரிதி இரானி

நான் எப்பயா ரபேல் ஊழல் பண்ண சொன்னேன் ~ காந்தி ஜீ

**சோழ நாட்டு மைந்தன்**

பொருளாதாரம் குறித்த ஆலோசனை கூட்டத்தில்.,

நிதியமைச்சர் எங்கடா!!!

**கோழியின் கிறுக்கல்**

ஒரு பொருளை செலவு செய்து வாங்குறவன் தான் Treat தரணும்ங்கிற வழக்கத்திற்கு முதல்ல தடை போடணும்!!

அதென்ன அநியாயம்!?

**ச ப் பா ணி**

என்னோட சர்வீஸ் என்னனு தெரியுமா என்பதற்கு

அனுபவம் பேசுதுன்னு அர்த்தம்.

**கருப்பு மன்னன்**

பிரனாய் விஜயனுக்கு நான் “கொள்ளி “வைப்பேன்

– எச் ராஜா.

உங்க அப்பா ஹரிஹரன் சர்மா இல்லையா !!

**எனக்கொரு டவுட்டு ⁉**

ஏம்பா, படம் ரிலீஸ் டைம்ல படத்தோட கதை என்னோடதுன்னு ஒரு கும்பல் வருமே இன்னும் வரலையா..!???

படத்துல கதையே இல்லையாம் சார்..!

**படிக்காதவன்**

எல்லோரும்

எல்லா விஷயங்களிலும்

அறிவாளியாக இருந்துவிட்டால்

முட்டாள் என்ற வார்த்தைக்கே

இடமில்லாமல் போயிருக்கும்…

-லாக் ஆஃப்


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share