வெங்காய பஜ்ஜியும் வெரைட்டி பொங்கலும்:அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

மூணு நாள் ஊருக்குப்போய் நல்லா பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்னு ஜாலியா கொண்டாடிகிட்டு இன்னைக்கு தான் எல்லாரும் ஊரில இருந்து வர்றாங்க. சரி டீக்கடை அண்ணா வந்திட்டாரான்னு பாத்திட்டு வருவோமேன்னு போனா, ‘அதிரடி விலையில் அசத்தல் வெங்காய பஜ்ஜி’ன்னு போர்ட மாட்டிவிட்டு அடுத்த ரவுண்டு வியாபாரத்தை ஆரம்பிச்சிட்டாங்க. அப்டியே பொங்கல் கதை, தர்பார் கதை எல்லாம் விசாரிச்சிட்டு அப்பிடி என்ன அண்ணே அதிரடி விலைன்னு கேட்டா, ‘பஜ்ஜி ரெண்டு அஞ்சு ரூபா தான்பா’ன்னு ஷாக் கொடுக்கிறாரு. என்னண்ணே, ஜல்லிக்கட்டில காளைய எதுவும் அடக்கி பூரா தங்கக் காசயும் அள்ளிகிட்டு வந்திட்டீங்களா? வெங்காயம் விக்கிற விலைக்கு இப்பிடி குடுக்கிறீங்களேன்னு கேட்டா, “நீ வேற குமாரு, வெங்காயம் இருநூறு ரூபான்னு வித்தப்போ எவனும் வாங்காம ஆம்லெட்ல கூட முட்டக்கோஸைப் போட்டு கலப்படம் பண்ணிட்டாங்க. வெங்காயப் பக்கோடாவில கூட பேரில மட்டும் தான் வெங்காயம் இருந்திச்சு, ஒருத்தரும் வாங்காம இப்போ எல்லா வெங்காயமும் குடோனிலயே கெடக்கு அதான் தெரிஞ்ச ஒருத்தரு, கிலோ 15 ரூபாக்கு தரேன்னு சொன்னாரு. நானும் வாங்கிட்டு வந்திட்டேன்”னு நமது அம்மா பேப்பர் படிச்ச மாதிரியே ‘பொது அறிவா’ பேசுறாரு. நீங்க அப்டேட்ட படிங்க. நான் அஞ்சு ரூபா பஜ்ஜி சாப்பிட்டிட்டு வர்றேன்.

**எனக்கொரு டவுட்டு ⁉**

ADVERTISEMENT

தமிழகத்தைக் காப்பாற்ற பாஜகவால்தான் முடியும் – குருமூர்த்தி

ஆனா, தமிழகத்துல பாஜகவை காப்பாற்ற ஆள் இல்லையே..!

ADVERTISEMENT

**திமிரு பிடிச்சவன்**

அப்பா ஆன்ட்ராய்டு மொபைல் கேட்டார்னு வாங்கி குடுத்தேன்… ஃபோன் வரவும் தட்டு தடுமாறி அட்டன் பண்ணி பேசி முடிச்சுட்டு என்னைய பார்த்து சிரிச்சார்…

ADVERTISEMENT

தட் திருவிழால 20 ரூபாய் ஃபோன் வாங்கி குடுத்து நம்மல மகிழ்ச்சியூட்டுன அந்த மொமண்ட்…

**ஹாமிதா**

ஜல்லிக்கட்டு போட்டியில் 16 முறை வெற்றிபெற்ற சகோதரர் சொன்ன பதில் என்னை உற்சாகபடுத்தி தயார்படுத்திய என் நண்பன் முஹம்மது”

தமிழர்களாய் பெருமிதம் கொள்வது தமிழ் மண்ணின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்று.

**ஜால்ரா காக்கா**

அரவிந்த் சாமி MGR கெட்டப் போட்ட மாதிரி இல்ல…

MGR அரவிந்த் சாமி கெட்டப் போட்ட மாதிரி இருக்கு

**நட்சத்திரா**

மாட்டுப் பொங்கலுக்கு உசுற விட்ட ஆடு, கோழிக்காக இன்னும் ரெண்டு நாளு மௌன வெரதத்தோட கண்ணீர் அஞ்சலி செலுத்த போறேன்..

**கோழியின் கிறுக்கல்!!**

பனிக்காலத்தில் இரு மடங்கு சோம்பல் முறிக்க வேண்டி உள்ளது!

‘பணி’க்காலத்திலோ நான்கு ஐந்து மடங்கு சோம்பல் முறிக்க வேண்டி உள்ளது!!

**SHIVA SWAMY.P**

சிலருடைய இதயம் வெங்காயம் மாதிரி, உரிக்க உரிக்க ஒன்னுமே இருக்காது..

**மாஸ்டர் பீஸ்**

மனம் என்பது விலைவாசி மாதிரி,

யாராலும் கட்டுப்படுத்த முடியாது!

**ஜோக்கர்**

ARM ~ அரவிந்த்சாமிய கூப்பிட்டு MGR மாதிரி நடிக்கவைக்குறதுக்கு பேரு திறமையில்லடா,

“ரஜினியை கூப்பிட்டு வந்து ரஜினி மாதிரியே” நடிக்க வைக்குறதுதான்டா திறமை. அப்படி பாத்தா நாதான்டா இங்க பெரிய திறமைசாலி.

**மாஸ்டர் பீஸ்**

இந்த பார்சல் சோத்த வாங்கி பிரிச்சி, குழம்பு, ரசம், சாம்பார், வத்தகுழம்பு, காரகுழம்பு, அவியல், பொறியல், ஊறுகாய்னு எல்லா பாக்கெட்டையும் பிரிச்சி அது அதுலேயும் கொஞ்சம் ஊத்தி அவுத்த எல்லாத்தையும் திரும்ப கட்டி வச்சிட்டு சோத்துல கைய வச்சா….

சோறு இருக்கும் பசி இருக்காது!

**mohanram.ko**

நம்ம கூடவே ஒருவரை வச்சிக்கணும்னு நினைச்சா, அவருடைய கைப்பேசிக்கு ‘ஹாட்ஸ்பாட்’ ஆன் பண்ணினாலே போதும்

**சிலந்தி**

எல்லாம் அவன் செயல்..

என்று போட்டுக் கொடுத்து விடுகிறார்கள்..!!

**எனக்கொரு டவுட்டு ⁉**

நல்ல வேளை தமிழக முதலமைச்சரா உ.பி முதல்வர் யோகி இல்லை ஒரு வேளை இருந்திருந்தா கோலம் போடுறதா சொல்லி மாடுகளை இழிவுபடுத்தியதற்காக தூக்கி உள்ளே வச்சிருப்பாப்புளே..!

**மெ.அழகப்பன்**

சிலைகளாகத்தான் வருகிறார்கள்

குழந்தைகள்

நாம்தாம்

செதுக்குவதாய் நினைத்துச்

சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

**Pachai Perumal.A.**

ரஜினி இங்கே தாராளமா வரலாமே.. ராஜபக்சே மகன் திடீர் டிவீட்..

என்ன பிளானோ.. என்ன நடக்க போகுதோ!

**உள்ளூராட்டக்காரன்**

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கு…

ஆனா நாம போற வழியில தான் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கு

**ரமேஷ்.ஏ**

பண்டிகை விடுமுறையால் மூடப்பட்டிருக்கும் உணவக வாசலில் “புரோட்டா/குஸ்கா ரெடி” என்ற வாசகத்தை சுமந்த படி தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டை கண்ட உடன் பசி மேலும் தன் வேலையை வேகமாக காட்டத்தொடங்குகிறது…!!!

**YUVARAJ**

காலைல வெச்ச பொங்கல்

மதியமும் சாப்பிட்டு

நைட்டும் சாப்பிடணுமா…?

“பசி இல்லமா”

சரிடா, கொஞ்சமா உப்மா செய்யரன், சாப்பிடு..

அய்யயோ… பொங்கலே போடு சாப்பிடறேன்…

**கோழியின் கிறுக்கல்!!**

சாதி சாக்கடையில் ஒருமுறை முங்கி எழுந்தவர், எத்தனை சந்தனம் தடவினாலும் துர்நாற்றம் விலகுவதில்லை!!!

-லாக் ஆஃப்


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share