‘குமாரு எனக்கு கொஞ்ச நாளாவே ஒரு சந்தேகம். உனக்காவது பதில் தெரிஞ்சா சொல்லுப்பா’ன்னு இன்னைக்கு அம்மா கேட்டாங்க. என்னம்மான்னு கேட்டா, இப்போ எல்லாம் நிறைய பேரு, மாஸ்க் போடலேன்னா போலீஸ் கிட்ட மாட்டிருவேன், வெளிய சுத்தினா போலீஸ் புடிச்சிருவாங்க. கடைக்குப் போகும்போது கேப் விட்டு நிக்கலைன்னா போலீஸ் அடிப்பாங்க’ன்னு போலீஸுக்குத் தான் பயப்படுறாங்க. இது எல்லாம் கொரோனா வராம இருக்கத் தானே செய்றோம். ஆனா கொரோனாவுக்கு பயப்படுறத விட காவல்துறைக்கு தான் பயப்படுற மாதிரி இருக்கு. அது ஏன்’னு கேட்டாங்க. ‘யாருக்கு பயந்தாலும் பரவாயில்ல. பத்திரமா இருந்தாலே போதும்’னு நான் சொன்னேன். நீங்க அப்டேட்ட படிங்க. நான் மாஸ்க் மாட்டிக்கிட்டு கடைக்கு போய்ட்டு வர்றேன்.

**கோழியின் கிறுக்கல்**
‘அப்புறம் பேசலாம்’ என்று செல்லும் சிலர்,
பிறகு பேசுவதே இல்லை!!
**மயக்குநன்**
பண முடக்கத்தால், வாங்க ஆள் இல்லாமல், சந்தைகளில் காய்கறி விலை வீழ்ச்சி!
காய்கறிகளுக்கே ‘மார்க்கெட்’ இல்லாம போயிடுச்சு போல..?!

**மெத்த வீட்டான்**
உங்களை நிரூபித்துக்கொண்டே இருப்பது உங்கள் வேலையல்ல.. ஆனால் நிரூபித்ததை காப்பாற்ற வேண்டியது உங்கள் வேலைதான் !
**சரவணன்.M**
மாநிலங்களின் மின் பிரச்சினையை தீர்க்க தனித்தனி தீர்வுகள் தேவை – பிரதமர் மோடி.
அதனால தான் மின்சார துறையை தனித்தனியா தனியார்மயமாக்கணும்னு சொல்றாங்க போல…?

**மாஸ்டர் பீஸ்**
ஆறுதலுக்கு அப்பாற்பட்டவைகள் சில வலிகள்!!!
**இதயவன்**
இந்தியாவின் பெயரை ‘பாரதம்’ அல்லது ‘ஹிந்துஸ்தான்’ என்று பெயா் மாற்றம் செய்யக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் ஜூன் 2 விசாரணை
புரிஞ்சிருச்சு பெயரை மாத்திட்டா சீனாக்காரன்ல நம்மள கண்டுபிடிக்க முடியாது சேப் ஆகிடலாம்?!!!
**மித்ரன்**
கிருஷ்ணகிரியில் இருப்பது லோகஸ்ட் வெட்டுக்கிளியில்லை; லோக்கல் வெட்டுக்கிளி தான் – மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர்
லோகஸ்ட் : ஓஹோ..!! இவங்க தான் உள்ளுர் ஆட்டக்கரங்களோ..?!
**மயக்குநன்**
ரூ.50 ஆயிரம் கோடி நிதி உதவி கேட்டு, ஏர் இந்தியா ஊழியர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம்!
இவங்க வேற… விமான நிறுவனத்தை விக்கிறதுக்கு ஆள் கிடைக்காம ‘ஜி’யே தவிச்சுக்கிட்டு இருக்காரு..!
**எனக்கொரு டவுட்டு**
அடுத்து என்ன, சென்னையில் தண்ணீர் பஞ்சம் வர காரணம் கொரானோ பரவாமல் தடுக்க மக்கள் அடிக்கடி கைகளை கழுவியதால் வந்ததேன்னு பேட்டி வரணுமே..!

**மயக்குநன்**
தேர்தல் வந்தால் ஸ்டாலின் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது!- கே.என்.நேரு.
மொதல்ல… தேர்தல் வர்றதை கொரோனா தடுக்காம இருக்கணுமே பாஸ்..?!

**சப்பாணி**
வீட்டு வேலை செய்யும் பொன்னம்மா சொன்னார்..
நானெல்லாம் ஆதியிலிருந்தே work from home என்று
**நாகராஜ சோழன்.M A.MLA**
கிளிகளிலே அவள் வெட்டுக்கிளி!!
நோய்களிலே அவள் கொரொனா

**Nithya**
கொரோனா அளவுக்கு வெட்டுக்கிளி பாதிப்பு வராதுணே…
ஓகோ யார்டா சொன்னது….??
நான் தான்ணே.. ஏழாம் அறிவு அளவுக்கு காப்பான் ஓடலேல..

**கடைநிலை ஊழியன்**
நல்லவனாய் இரு !!
கெட்டவர்களிடம் அல்ல !!
**-லாக் ஆஃப்**









