போராட்டம் பண்றாங்க, வயலன்ஸ் பண்றாங்கன்னு ஒரே பேச்சா இருக்க டெல்லில இருக்க நம்ம பயலுவளுக்கு ஃபோன் போட்டா, நான் இங்க டிராஃபிக்ல இருக்கேன் வீட்டுக்கு போக எப்படியும் ஒரு மாசம் ஆகும்போல அப்டின்றானுக. சரி, போராட்டம்லாம் எப்படிடா போகுதுன்னு கேட்டா, ‘வேணும்னே எல்லா மதத்து பொண்ணுங்களும் ஃபர்தா போட்டுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்கப்பா. அதுலயும் சிலர் போலீஸுக்கு ரோஸ் கொடுத்து ‘அண்ணா போய் சாப்டுட்டு வாங்க. எங்கயும் போக மாட்டோம்’ அப்டின்னு சொல்லி அனுப்புறாங்க. இது கூட பரவால்ல, அங்கயே சோறு ஆக்கி சமைக்குறதுக்கு ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. எல்லாம், ரெண்டு வருசத்துக்கு முன்ன நாம மெரினால பண்ணோம்ல அதே மாதிரி போய்கிட்டு இருக்கு அப்டின்றான். ஜனவரி 23 நம்ம ஊர்ல பேரணின்னு சொல்லியிருக்காங்களே, என்ன பண்ண போறன்னு கேட்டா, ‘டிரஸ்ஸு ஸ்டவ்வு எல்லாத்தையும் ரெடி பண்ண சொல்லிட்டேன். குடும்பத்தோட கிளம்பி வந்துட வேண்டியது தான். என் தாத்தா எல்லாம் அப்படித்தான போய் ஒவ்வொரு போராட்டத்துலயும் கலந்துக்கிட்டாங்க. நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. செய்வோம்’னு சொல்றான். அதுக்கு முதல்ல அந்த டிராஃபிக்ல இருந்து வெளில வாடான்னு சொல்லிட்டு ஃபோனை வெச்சிட்டேன். ஊரெல்லாம் டிராஃபிக் ஆக்கி, கவர்மெண்டையே வேற வழில திருப்பி உட்ட பெருமையெல்லாம் ஒரிஜினல் இந்தியன்களையே சேரும். சரி, அப்டேட்டைப் படிங்க. நான் போய் அந்த லீவ் லெட்டரை குடுத்துட்டு வந்துடுறேன்.
**ஜோக்கர்**
டெல்லியில் இணையசேவை முடக்கம். அடுத்து போராட்டம் வலுப்பெறும் மற்ற பகுதியிலும் இது தொடரும்.
முன்பே காஷ்மீரில் இணையசேவை முடக்கப்பட்டு 5 மாதம் ஆகிறது. முழு இந்தியாவும் காஷ்மீராக்க ட்ரை பண்றாங்க.
மொத்த மக்களுக்கும் பிடிக்காத விஷயத்தை திணிச்சு இவங்க யாருக்காக ஆட்சி செய்றாங்க?
மாஸ் என்ட்ரி ???????? pic.twitter.com/bj2vBpECQ7
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) December 18, 2019
**அசுரன்**
மண்ணையும் கெடுத்து பெண்ணையும் கெடுத்து வாழ்வதுதான்
நவீன நாகரீக வாழ்க்கை!!!!
**salma**
மெட்ரோ ஸ்டேசன்களை மூடியாயிற்று இன்டர்நெட் மூடியாயிற்று.. தலைநகரமாம் டெல்லி.
**சரவணன்**
குடியுரிமை வழங்கபடவில்லை எனில் கைலாசம் செல்வேன் நகைச்சுவையாக கூறிய சீமான் -செய்தி
நகைச்சுவையாக தான் சொன்னார் என்று ஏன் குறிப்பிட்டு சொல்றீங்க? எப்பவுமே சீமான் பேச்சை சீரியஸாவே இங்க யாரும் நினைக்கலையே!
**ரமேஷ்.ஏ**
ஆட்டோகாரர்கள் என்பது புனைப் பெயர் தான்…,நிஜப்பெயர் “அவசரகாரர்கள்”….!!!
???? ???? ???? ???? ???? pic.twitter.com/IStq2lFzJt
— Dr.கவுண்டர்மஹான் பக்தன் ™ (@goundarvotary) December 19, 2019
**உள்ளூராட்டக்காரன்**
மேலத்தெரு மாரிமுத்து – ஊராட்சி தலைவர் – 10 லட்சம்
மூதேவி… இது ஐபிஎல் ஏலம்
** ஜால்ரா காக்கா**
கார்த்திக் சுப்புராஜ் ஒரு முட்டாள் SV. சேகர் – செய்தி
சார் யாருன்னு தெரியும்ல 2000 நோட்டுல சிப் இருக்குன்னு கண்டு புடிச்ச நாசா விஞ்ஞானி
**ராணி**
பார்வைகள் நேர்மையாக இருந்தால் எண்ணமும் நேர்மையாகவே இருக்கும்
எண்ணம் போல் வாழ்க்கை
**கோழியின் கிறுக்கல்!!**
நல்ல பேச்சாளராக தெரிய நிறைய படிக்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை,
முட்டாள்களின் முன் பேசினாலே போதுமானது!!
சிறப்பு ???? pic.twitter.com/kH6t09u187
— ????எனக்கொரு டவுட்டு ⁉ (@Thaadikkaran) December 19, 2019
**ச ப் பா ணி**
கடவுள் நல்லவங்களை அதிகம் சோதிப்பாரு? என்பதால் தான் எல்லாரும் கெட்டவங்களா மாறிடுறாங்க
**மாஸ்டர் பீஸ்**
வாழ்க்கை சிரிக்கக்கூடாதுனு தண்டனை விதிச்சா… சிரிச்சிக்கிட்டே தண்டனைய அனுபவிக்கனும்.
**செல்வி**
எனது அப்பாவின் இருதய அறுவை சிகிச்சைக்காக 2006 ல் வடபழனி விஜயா ஆஸ்பத்திரியில் ரத்தம் வழங்கிய
ஷேக்அப்துல் இளையான்குடி(தற்போது மண்ணடியில் வசிக்கிறார்)
டேவிட்ஜெயக்குமார் (துபாயில் வசிக்கிறார்)
ஆறுமுகம் (சென்னை காவல் துறையில் பணிபுரிகிறார்)
அறுவை சிகிச்சை டாக்டர். விக்டர் சாலமன்
கர்த்தரே இந்த பாவியை மன்னியுங்கள்… ???? pic.twitter.com/1LWw0MK2B7
— Dr.கவுண்டர்மஹான் பக்தன் ™ (@goundarvotary) December 19, 2019
**ச ப் பா ணி**
உனது கண்ணில் ஒரு சிறிய மணல் விழுந்தால் போதும். உன்னால் இந்த பரந்த வானத்தை பார்க்க முடியாது
**ரஹீம் கஸ்ஸாலி**
கான்பூரில் மோடி தவறி விழுந்த படிக்கட்டுகளை இடிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது
அப்ப தடுமாறிய அந்த காலு?!
-லாக் ஆஃப்