உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு ஆலையில் நடந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் பாய்லர் ஒன்று திடீரென நேற்று (ஜூன் 4) வெடித்தது. பாய்லர் வெடித்து சில நொடிகளில் தீ பரவி அந்த ஆலையே கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 19 பேர் படுகாயமடைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த சுற்று வட்டாரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “ரசாயன ஆலையில் நடந்த தீ விபத்து ஒரு பெரிய துயர சம்பவம். இந்த சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 19 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதில் மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த விபத்தில் இறந்த குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம்: ரசாயன ஆலையில் தீ விபத்து!
Published On:
| By admin
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
