Virat Kohli: 2024 ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது பிளே-ஆஃப் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மே 21 அன்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில், அபார வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மே 22 அன்று நடைபெற்ற இந்த தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்ய வந்த பெங்களூரு அணிக்கு, துவக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி, அந்த அணிக்கு ஒரு சிறப்பான துவக்கம் அளித்து 33 (24) ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 8,000 ரன்களை விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார். இந்த இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.
முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் 7,000 ரன்களை கடந்த முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமைக்கும் விராட் கோலியே சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில், விராட் கோலிக்கு அடுத்துள்ள ஷிகர் தவான், இதுவரை 6,769 ரன்களை சேர்த்துள்ளார்.
முதல் இடத்திற்கும் 2வது இடத்திற்கும் உள்ள வித்தியாசம், ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேன்னாக திகழ்ந்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
*ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்*
1) விராட் கோலி – 8004 (244 இன்னிங்ஸ்கள்)
2) ஷிகர் தவான் – 6769 (221 இன்னிங்ஸ்கள்)
3) ரோகித் சர்மா – 6628 (252 இன்னிங்ஸ்கள்)
4) டேவிட் வார்னர் – 6565 (184 இன்னிங்ஸ்கள்)
5) சுரேஷ் ரெய்னா – 5528 (200 இன்னிங்ஸ்கள்)
இந்த 2024 ஐபிஎல் தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடிவரும் விராட் கோலி, இதுவரை விளையாடிய 15 இன்னிங்ஸ்களில், 1 சதம், 5 அரைசதம் உட்பட 741 ரன்களை குவித்த ‘ஆரஞ்சு’ தொப்பியை தன்வசம் வைத்துள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: அவரைப்பருப்பு சாதம்!
டிஜிட்டல் திண்ணை: மோடி பிரதமர் ஆக மாட்டார்… ஆர்.எஸ்.எஸ்.சின் அடுத்த பிளான்!
கடவுளின் தூதரா மோடி? ஆ.ராசா பளிச் பதில்!
பூரி ஜெகன்நாதர் கோயிலில் உள்ள மர்மம் என்ன? யார் அந்த தமிழர் வி.கே.பாண்டியன்?