ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Published On:

| By christopher

தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோவை, ஈரோடு, தென்காசி உள்ளிட்ட 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடங்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். மேலும் இன்று (ஏப்ரல் 16) ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெறவும் அனுமதி அளித்தது.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று மாலை 3 மணியளவில் தமிழ்நாட்டில் சென்னை, ஈரோடு, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியுள்ளது.

மன்னர் சிவாஜியின் 350வது முடி சூட்டிய விழா, அம்பேத்கரின் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தப்படுகிறது.

ADVERTISEMENT

சென்னை கொரட்டூர் பள்ளி அருகே ஆர்.எஸ்.எஸ். பேரணியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.

அதேபோல், கரூர் – சேலம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் பகுதியிலும், தென்காசி மாவட்டம் சங்கரநாராயணன் திருக்கோவில் பகுதியிலும், கோவையில் பொன்னைய ராஜபுரத்தில் உள்ள காந்தி பூங்கா பகுதியில் இருந்தும் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

இதனைத்தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பொதுக்கூட்டம் மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள 45 இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி: முதல்வர் நிதியுதவி!

மதுரையில் மாநாடு: அதிமுக செயற்குழு கூட்ட முழுத் தீர்மான பட்டியல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share