விமான விபத்து… விஜய் ரூபானி உயிரிழப்பு… மத்திய அமைச்சர் தகவல்!

Published On:

| By Minnambalam

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று (ஜூன் 12) விபத்துக்குள்ளானதில் 204 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பயணம் செய்தார். தனது மகளை லண்டனுக்கு பார்க்க சென்றபோது இந்த விபத்தில் சிக்கினார். இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது. Union minister C R Patil confirms the death of VijayRupani

ADVERTISEMENT

இந்தநிலையில், விமான விபத்தில் விஜய் ரூபானி உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டில் தெரிவித்துள்ளார். விஜய் ரூபானி மறைவு பாஜக நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share