‘நாங்க வேற நாட்டில் இல்லையே?’ மக்களவையை அதிரவைத்த தமிழக எம்.பிக்கள்

Published On:

| By Mathi

Lok Sabha TamilNadu MPs

“தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது” என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் இன்று (டிசம்பர் 16) பேசியதாவது:

ADVERTISEMENT

டி.எம். செல்வகணபதி: எனது பெயரைக் கூற உங்களுக்கு (சபாநாயகருக்கு) எப்படி தடுமாறுகிறதோ, அதே பிரச்சனை தான் எங்களுக்கும் நீங்கள் சூட்டும் இந்திப் பெயரிலான திட்டங்களை நாங்கள் உச்சரிக்க தடுமாறுகிறோம். மத்திய அரசு கொண்டு வரும் சட்டம், திட்டம் என எல்லாவற்றிலும் இந்தியை திணிப்பது ஏன்?

டாக்டர் ராணி ஸ்ரீகுமார்: புதியக் கல்வி கொள்கையை வைத்து இந்தியை தமிழ்நாட்டில் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதனை நாங்கள் ஏற்க மாட்டோம். தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் வஞ்சிக்கிறது. தமிழ்நாடு இந்தியாவில் தானே உள்ளது, வேற நாட்டில் இல்லையே?

ADVERTISEMENT

காப்பீட்டுச் சட்டங்கள் திருத்த மசோதா மீது தமிழச்சி தங்கபாண்டியன்: மசோதாவின் பிரிவு 2 சி-ஐ திருத்துவது, இந்தியாவில் காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்குவதாகும். இது தேசத்தின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பு விதிகளின் மீறலாகும். மசோதாவின் பிரிவு 2 சி.ஏ.-ல் உள்ள உட்பிரிவுகள் ஏ மற்றும் பி-ஐச் சேர்ப்பது தேசிய காப்பீட்டு நிறுவனங்களின் நலன்களுக்கு எதிரானது.

ஏனெனில் (ஏ) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-இன் விதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நிதிச்சேவை மையங்கள் உள்பட எந்தவொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் உள்ள ஒரு காப்பீட்டாளர் அல்லது காப்பீட்டு இடைத்தரகருக்கு இது பொருந்தாது.

ADVERTISEMENT

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம், 2005-இன் விதிகளின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச நிதிச்சேவை மையங்கள் உள்பட எந்தவொரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் உள்ள காப்பீட்டாளர் அல்லது காப்பீட்டு இடைத்தரகருக்கு, அறிவிப்பில் குறிப்பிடப்படக்கூடிய விதிவிலக்குகள், மாற்றங்கள் மற்றும் தழுவல்களுடன் இது பொருந்தும்.

இது காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழிவகுக்கிறது. இது இந்திய காப்பீட்டுத் துறைக்கு எதிராக இருப்பதால், இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நியாயப்படுத்த முடியாதது.

மேற்கூறிய ஆட்சேபனைகளின் பார்வையில், இந்த மசோதா நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகவும், இந்திய அரசியலமைப்பை மீறுவதாகவும் இருப்பதால், ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

திருத்தம் மற்றும் திரும்பப் பெறும் மசோதா-2025 இன் மீது சு.வெங்கடேசன்: நீதிபதியின் சாயல் தீர்ப்பில் விழுவது போன்ற சாபக்கேடு எதுவுமில்லை. தீர்ப்பு என்பது வழக்கில் இருந்து எழுதப்பட வேண்டும். பணி ஓய்வுக்குப்பின் பெறப்போகும் பதவிக்கான நுழைவுத்தேர்வாக அமைந்துவிடக் கூடாது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share