16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மறுக்கும் மத்திய அரசு- விஜய் குற்றச்சாட்டு

Published On:

| By Mathi

Puducherry Vijay New

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி சட்டப்பேரவையில் 16 முறை தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசு புறக்கணித்து வருகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

புதுச்சேரி உப்பளம் எக்ஸ்போ மைதானத்தில் இன்று நடைபெற்ற வாகன பிரசார கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் உங்கள் அனைவருக்கும் வணக்கம்… வணக்கம்.. எல்லோரும் எப்படி இருக்கீங்க?

இந்த ஒன்றிய அரசுக்குத்தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம்…
புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசம், அவங்களுக்த்குதான்
தமிழ்நாடு தனி… புதுச்சேரி தனி.. அப்படின்னு இருப்பாங்க.. ஆனா நமக்கெல்லாம் அப்படி கிடையாதுங்க..

ADVERTISEMENT

நாம எல்லாம் வேறு வேறு கிடையாது… நாம எல்லாம் ஒண்ணுதான்.. தமிழ்நாடும் புதுச்சேரியும் தனித்தனியாக இருந்தாலும் நாம எல்லோரும் ஒண்ணுதான்… நாம எல்லாரும் சொந்தம்தான்.

வேற வேற வீட்ல.. வேற வேற ஊர்ல வேற.. வேற வேற நாட்ல.. வேற வேற ஸ்டேட்ல இருக்கிறதால நாம எல்லாம் சொந்தங்க இல்லன்னு இருக்க முடியுமாங்க? அதெப்படி முடியும்?

ADVERTISEMENT

இப்ப பார்த்தீங்க இல்லையா.. நாம ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்கிற போது வர்ற அந்த பாச உணர்வு.. அதுதாங்க.. அதுமட்டும் இருந்துட்டா போதும் வேற எதுவுமே தேவை இல்லை..

அதனால தமிழ்நாடு, புதுச்சேரி ,கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டும் இல்ல உலகத்துல எந்த மூலையில நம்ம வகையறா இருந்தாலும் அவங்க எல்லாருமே நம்ம உயிர்தான்.. அவங்க எல்[லோரும் நம்மோட உறவுதான்.

ADVERTISEMENT

புதுச்சேரின்னாலே உடனே ஞாபகத்துக்கு வர்றது,
மணக்குள விநாயகர்
அரவிந்தர் ஆசிரமம்
வில்லியனூர் மாதான்னு ஞாபகத்துல வருவாங்க.

அதுமட்டுமல்ல.

மகாகவி பாரதியார் அவர்கள் இருந்த மண்.. பாவேந்தர் பாரதிசாதன் அவர்கள் பிறந்த மண். அதுமாரி இன்னும் சிறசிறப்புகள அடுக்கிட்டே போலாம்.. ஆனால் அரசியல்ன்னு வந்துட்டா ஒரு முக்கியமான விஷயத்த பத்தி சொல்லியே ஆகனும்.

1977-ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சாங்க.. ஆனா அதுக்கு முன்னாடியே 1974-ல் இங்கே ப்
புதுச்சேரியில அவங்க ஆட்சி அமைஞ்சது..

அதனாலதான் அப்பவே சொன்னாங்க.. நமக்காக வந்தவரு எம்.ஜி.ஆர்… அவர தமிழ்நாட்டுல மிஸ் பண்ணிடாதீங்கன்னு நமக்கு அலெர்ட் பண்ணினதே புதுச்சேரிதான். அப்படிப்பட்ட புதுச்சேரியை நம்மலால மறக்க முடியுமா?

அதுமட்டுமில்ல.. இங்க இருக்கிற மக்கள்.. தமிழ்நாடு மாதிரியே புதுச்சேரி மக்களும் என்னை கிட்டதட்ட 30 வருஷமாக தாங்கிப் புடிச்சுகிட்டு இருக்கிறீங்க..

அதனால இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான்னு நெனைக்காதீங்க… அப்படி பண்ணினா அது தவறு.. புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துதான் குரல் கொடுப்பான்.. அது என்னோட கடமையும் கூட

அதனாலதான் இங்க நீங்க ஃபேஸ் பண்ற பிரச்சனைகளை பத்தி இன்னிக்கு நான் பேசுறதுக்காக வந்திருக்கிறேன்.

அதுமட்டுமல்ல இங்க இருக்கற புதுச்சேரி கவர்மெண்ட் பத்தி நாம சொல்லியே ஆகனும்.. இது டெபனிட்டா தமிழ்நாட்டுல இருக்கற தி.மு.க. கவர்மெண்ட் மாதிரி கிடையவே கிடையாது.

ஏன்னா, வேற ஒரு அரசியல் கட்சி நடத்துற நிகழ்ச்சியா இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு தன்னெழுச்சியா வர்ற நம்ம மக்களுக்கு மக்களுக்கும் பாதுகாப்பு கொடுத்து பாரபட்சமே காட்டாம இந்த கவர்மெண்ட நடந்துகிட்டு இருக்காங்க..

அப்படிப்பட்ட இந்த புதுச்சேரி கவர்மெண்ட்டுக்கும் நம்ம புதுச்சேரி சிஎம் சார் அவர்களுக்கும் இந்த நேரத்துல என்னுடைய மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிச்சுக்கிறேன்.

இதப் பாத்தாவது தமிழ்நாட்டுல இருக்கற அந்த தி.மு.க கவர்மெண்ட் கத்துக்கிட்டா நல்லா இருக்கும்… ஆனா அவங்க கத்துக்க மாட்டாங்க… பரவாயில்லை.. வர்றப்போற எலெக்சன்ல 100% கத்துக்குவாங்க… அத நம்ம மக்கள் பாத்துப்பாங்க…

புதுச்சேரியில இருக்கற கவர்மெண்ட்டோட கூட்டணி ஆட்சியில இருந்தாலும் புதுச்சேரிய ஒன்றிய அரசு எதுலயுமே கண்டுக்கலன்றது புதுச்சேரி மக்களான உங்களுக்கே
நல்லாவே தெரியும்…

மாநில அந்தஸ்து கோரிக்கைய மட்டுமா கண்டுக்கல.. இங்க வளர்ச்சி ஏற்படவும் துணை நிக்கவே இல்லைன்னு கேள்விபடுறோம்

இந்த புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்து கொடுக்கல…மாநில அந்தஸ்து வேணும்னு கேட்டு பலமுறை சட்டசபையில தீர்மானமும் போட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பி வச்சிக்கிட்டே இருக்காங்க… இந்த வருசம்கூட மார்ச் மாதம் 27-ந் தேதி, 202 அன்னைக்கு ஒரு தீர்மானம் போட்டாங்க… அது மாநில அந்தஸ்து வேணும்னு கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பற 16வது தீர்மானம்.

புதுச்சேரி, காரைக்கல் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள்,
பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கறதுக்கு இதுவரைக்கும் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடல…

பல்லாயிரக்கணக்கான இளைஞர்களோட வேலை வாய்ப்புக்காக எதையுமே செய்யல… இங்கே ஒரு ஐ.டி கம்பெனி உருவாக்குற எண்ணமே இல்ல… அதப் பத்தி யார் பேசினாலும் அவங்க காதில விழவே விழலை..

இங்க ஒரு அமைச்சர ஊழல் குற்றச்சாட்டால பதவிய விட்டு நீக்கப்பட்டு அந்த இடத்துக்கு இன்னொருத்தர நியமிச்சு 200 நாளாச்சு… இன்னும் அவருக்கு ஒரு இலாகாவே தரல… இந்த செயல், சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துறதுன்னு
அந்த மக்களே சொல்றாங்களே…

புதுச்சேரியோட முக்கிய அங்கமா இருக்கிற காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் எல்லாம் முன்னேற்றமே இல்லன்னு அந்தப் பகுதி மக்கள் சொல்லிகிட்டே இருக்காங்க…

குறிப்பா காவிரியோட கடைமடைப் பகுதியான காரைக்காலை மொத்தமா கைவிட்ட மாதிரிதான் இருக்குது… இத எல்லாம் முன்னேற்றம் அடையணும்…

டூரிஸ்ட் பிளேஸான புதுச்சேரியில போதுமான அளவு பார்க்கிங் வசதி இல்ல…போதுமான அளவு கழிப்பறை வசதி இல்ல… இத எல்லாமே மேம்படுத்தணும்…

புதுச்சேரி-கடலூர் மார்க்கமான ரயில் திட்டம் வேணுங்கிறது
நீண்ட கால கோரிக்கை…

புதுச்சேரி மக்களுக்கு ஒன்னே ஒன்னுதான் சொல்லனும்.. இந்த திமுகவை நம்பாதீங்க.. அவங்களுக்கு உங்களை நம்ப வைச்சு ஏமாத்துறதுதான் வேலையே..

நாம சொன்ன பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நம்ம புதுச்சேரி கவர்மெண்ட்டுக்கும் அதோட மக்கள் திட்டங்களுக்கும் ரொம்ப அக்கறையா, உண்மையா துணை நிற்கனும்.

தமிழ்நாட்டை ஒதுக்குற மாதிரி, புதுச்சேரியையும் ஒதுக்கக் கூடாதுன்னு கேட்டுக்கிறோம். கிட்டதட்ட 20 லட்சம் பேரு வாழ்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரி, மத்திய நிதிக்குழுவில் இடம் பெறவில்லை.

அதனால் மாநிலங்களுக்கான நிதிப் பகிர்தல் அடிப்படையிலும் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப் பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவது இல்லை. அதனால ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாகவே மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது.

அந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட திட்ட செலவுகளுக்கே சென்று விடுவதால் மீதத் தேவைக்கு வெளிச்சந்தையிலும் கடன் பத்திரங்கள் மூலமாகவும் கடன் வாங்குகிறது புதுச்சேரி.

இந்த நிலைமை மாறனும்னா ஒரே வழி மாநில அந்தஸ்து.. நம்ம புதுச்சேரி மக்களோட பல்லாண்டு கால கோரிக்கை.

புதுச்சேரிக்கு போதுமான நிதி வரத்து இல்லாததால வெளியே கடன்வாங்க வேண்டியதா இருக்கு.. புதுச்சேரியோட கடனைக் குறைச்சு தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

மாநில அந்தஸ்து வாங்கினா மட்டும் போதாது இல்லையா? தொழில் வளர்ச்சியும் தேவையாச்சே.. புதுச்சேரி, தென்னிந்தியாவின் முன்னணி இண்டஸ்ட்ரி ஹப் ஆக மாற்ற எல்லா முயற்சிகளும் எடுக்க வேண்டும்.

இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருக்கிற மாதிரி இங்கேயும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய்னு அனைத்துப் பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும்.

கடைசியாக, மீன்பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை அடிக்கடி கைது செய்யும் இலங்கை கடற்படை அவர்களின் படகுகளை பறிமுதல் செய்துவிடுகிறது. அதனால் நீண்ட போராட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும் படகுகள் கிடைக்காததால் படுமோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.

இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்பவும் துணை நிப்பான்.. வரப்போற புதுச்சேரி தேர்தல் களத்துல
நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்தோட கொடி பட்டொளி வீசி பறக்கும்… கான்ஃபிடெண்டா இருங்க…
நல்லதே நடக்கும்… வெற்றி நிச்சயம்… மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம். இவ்வாறு விஜய் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share