ஆ.ராசா கோரிக்கை ஏற்பு: கோவை- ஊட்டி NH 181 சாலை பராமரிப்புக்கு ரூ.86.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு

Published On:

| By Mathi

A Raja Ooty

திமுக துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசாவின் கோரிக்கையை ஏற்று கோவை- ஊட்டி NH 181 சாலை பராமரிப்புக்கு ரூ.86.98 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பாக ஆ.ராசா எம்.பி. கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மிகவும் பழுதடைந்துள்ள கோயம்புத்தூர் – ஊட்டி – குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையில் (NH-181) பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நடப்பு நிதியாண்டில் ரூ. 8698.88 லட்சம் நிதி ஒதுக்கீடு (ரூ.86.98 கோடி) மற்றும் நிர்வாக அனுமதி வேண்டி கடந்த 10.12.2025 அன்று மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.

ADVERTISEMENT

எனது கோரிக்கையினை ஏற்று, கோயம்புத்தூர் – ஊட்டி – குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையில் (NH-181) உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உரிய நிர்வாக மற்றும் நிதி அனுமதி அளித்து உத்தரவிட்ட மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு எனது மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share