அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள்!

Published On:

| By Kavi

2024-25 budget session nirmala sitaraman

2024 – 25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை வாசித்து வரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும் என்றார்.

“கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சவால்கள் இருந்தபோதிலும், பிரதமர் ஆவாஸ் யோஜனா கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் என்ற இலக்கை விரைவில் எட்டவுள்ளோம்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.

பிரதமர் கிசான் திட்டத்தின் மூலம் 11. 8 கோடி விவசாயிகள் பயன்பெற்றனர். 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்படும். எண்ணெய் வித்துக்களுக்கான சுயசார்பு இயக்கம் அமலாக்கப்படும்.

ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும். சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதம்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்” என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தனிநபர் சராசரி வருமானம் 50 % அதிகரிப்பு!

“80 கோடி பேருக்கு இலவச ரேஷன்” : நிர்மலா சீதாராமன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share