மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் உடை ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் கவனம் பெறுகிறது.
நாடாளுமன்றத்தில் இன்று 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த போது நிர்மலா சீதாராமன், பீகார் மாநிலத்தின் புகழ் பெற்ற புடவையை உடுத்தி இருந்தார். அப்போது, பீகார் சட்டப்பேரவை தேர்தல் காலம்.. அதனால் பீகாருக்கு ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் காஞ்சி பட்டுப் புடவையை உடுத்தி உள்ளார். தமிழ்நாட்டுக்கு அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.. இந்த பட்ஜெட்டி தமிழகத்துக்கு ஏராளமான அறிவிப்புகள் இடம் பெறுமா? என்பது எதிர்பார்ப்பு
