ADVERTISEMENT

UNICEF தூதரான சூப்பர் வுமன்!

Published On:

| By Balaji

கனடாவிலுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த லில்லி சிங் தனது இசை ஆல்பங்களால் உலகம் முழுவதும் பிரபலமானவராக திகழ்கிறார். யூ டியூப் இணையதளத்தில் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றுள்ள இவர் சூப்பர் வுமன் என்றும் அழைக்கப்படுகிறார். 28 வயதான லில்லி சிங் UNICEF-க்கான நல்லெண்ண தூதுவராக நேற்று (ஜூலை 15) புதுடில்லியில் நடைபெற்ற விழாவில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

முன்னதாக UNICEF சார்பாக மத்தியபிரதேசத்திற்கு பயணம் செய்து அங்குள்ள இளையோர்களை சந்தித்துள்ளார். இது குறித்து பேசிய லில்லி சிங், “நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டதன் மூலம் UNICEF மேற்கொள்ளும் பணி ஒவ்வொரு குழந்தைக்கும் சென்று சேர்ந்திட குரல் கொடுப்பேன். நான் இங்கு வறுமை உள்ளிட்ட பல்வேறு சவால்களோடு உள்ள பல குழந்தைகளை சந்தித்தேன். அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள். இளையோர்களாகிய நாம் தான் நேர்மறையான மாற்றம் வரவேண்டி பாரம்பரியத்தை கேள்விகேட்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share