கூகுள் நிறுவனம் வெளியிட்டNexus மொபைல்கள் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு os தயாரித்த நிறுவனமான கூகுள் இதை வெளியிடுவதால் பெரும்பாலும் புதிய ஆண்ட்ராய்டு வெர்சன்கள் இதில் முதலில் வெளியாகும். அதன்பின்னரே பிற மொபைல்களுக்கு வழங்கப்படும். Nexus நிறுவனத்தின் மாடல்கள் அனைத்தும் பிரிமியம் மாடல்கள் என்பதால் இந்தியாவில் அதன் விற்பனை குறைவு. இருப்பினும் இந்தத் தகவல் Nexus பயன்படுத்தும் நபர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் பயன்படும். நேற்று Nexus நிறுவனம் வெளியிட்ட தகவலில், புதிதாக வெளியிடப்பட்ட ஆண்ட்ராய்டு வெர்சனான Nougat 7.1.1-ஐ டவுன்கிரேட் செய்து முந்தைய வெர்சனான Nougat 7.0 விற்கு மாறுவதாக தெரிவித்துள்ளனர்.
காரணம், சில புதிய வெர்சனை அப்டேட் செய்த அனைத்துப் பயனர்களும், இந்த புதிய அப்டேட்டுக்கு எதிர்மாறான கருத்துகளை தெரிவித்தது வந்துள்ளனர். அதில், இந்த புதிய அப்டேட் செய்வதன்மூலம் பயன்படுத்திவரும் அப்ளிகேஷன்கள் பாதிக்கப்படுவதாகவும், தகவல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, அப்டேட் செய்த அனைத்துப் பயனர்களுக்கும் எளிமையாக டவுன்கிரேட் செய்யும் வசதியை வழங்கியிருப்பதாகவும், டவுன்கிரேட் செய்தபின்னர் மொபைலை ஒருமுறை restart செய்து பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர் Nexus நிறுவனத்தினர்.
