ஹெல்த் டிப்ஸ்: நீரிழிவு கட்டுக்குள் வராமல் இருக்கிறதா? இதைச் செய்யுங்கள்!

Published On:

| By Kavi

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும் கட்டுப்பாடற்ற நீரிழிவு பிரச்சினைக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்கின்றன சமீபத்திய மருத்துவ ஆய்வுகள். எனவே நீரிழிவு கட்டுக்குள் வர மறுக்கிறது என்று புலம்புவோர், தங்கள் உறக்கம் குறித்தும் சற்று பரிசீலிக்கலாம்.

நடப்பு வாழ்க்கை முறையில் நீரிழிவு என்பது சகலமானோரையும் பாதித்து வருகிறது. நீரிழிவு உறுதி செய்யப்பட்டாலும், முறையான உணவு, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை பழக்கிக்கொண்டால் போதும். சர்க்கரை அளவு சமர்த்தாய் கட்டுக்குள் வந்து விடும்.

ADVERTISEMENT

இந்தப் பட்டியலில் தற்போது உறக்கத்தையும் சேர்த்துக்கொள்வது இனி அவசியமாகிறது. அதிலும் மருந்து, உணவு, உடற்பயிற்சி எனப் பலவற்றையும் முறையாக பின்பற்றியபோதும் நீரிழிவானது கட்டுக்குள் வரவில்லையே என்பவர்கள் அன்றாடம் உறங்கும் முறையை தீவிரமாக பரிசீலித்தாக வேண்டும்.

ஏனெனில் தூக்கமின்மை என்பது உடலின் குளுக்கோஸ் அளவை பல்வேறு வழிகளிலும் பாதிக்கவே செய்கிறது. மனித உடல் போதிய ஓய்வு மற்றும் உறக்கத்தை இழக்கும்போது, பசியின்மை மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக நீரிழிவு பாதிப்பு கண்டவர் அதிகமாக சாப்பிட நேரிடலாம். இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிக்கக் கூடும். போதிய உறக்கம் இல்லாதது இன்சுலின் எதிர்ப்புக்கும் வழிவகுக்கும்.

ADVERTISEMENT

உடல் குளுக்கோஸை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதைக் கட்டுப்படுத்த தூக்கம் முக்கியமானது. எனவே தூக்கத்தை தவிர்ப்போர் நீரிழிவு அபாயத்தை தவிர்க்கவும், நீரிழிவு கண்டவர்கள் தங்கள் சர்க்கரை அளவு எப்போதும் கட்டுக்குள் இருக்கவும் போதிய அளவு உறக்கத்தை அன்றாடம் உறுதி செய்வது அவசியமாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல்… 9 ’மாவட்டங்கள்’ எதிர்ப்பு! என்ன செய்யப் போகிறார் ஸ்டாலின்?

குளுகுளு சென்னை: அப்டேட் குமாரு

இன்றும் உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு?

பப்புவா நியூ கினி நிறுவன பட தயாரிப்பில் இணையும் பா. ரஞ்சித்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share