Iரிலாக்ஸ் டைம்: வரகரசி கேசரி
�
கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து அதிகமாகவும் மாவுச்சத்து குறைந்தும் இருப்பதால் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. வரகரிசியில் கேசரி செய்து ரிலாக்ஸ் டைமில் சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்.
**எப்படிச் செய்வது?**
ஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் ஊற்றி உருக்கி, அதில் 10 முந்திரி, 10 கிஸ்மிஸ்ஸை வறுத்தெடுக்கவும். அதே நெய்யில் அரை கப் வரகை வறுத்துக்கொண்டு ஆறியவுடன் மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த வரகு ரவையை ஒரு வாணலியில் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். கொதி வந்ததும் அடுப்பை குறைத்து பாத்திரத்தை மூடியால் மூடி வேகவிடவும். இடையிடையே திறந்து கிளறி விடவும். தண்ணீர் போதவில்லை என்றால் சிறிது தண்ணீரைச் சுட வைத்து ஊற்றவும். நன்றாக வெந்தவுடன் இரண்டு சிட்டிகை கேசரி பவுடர், முக்கால் கப் சர்க்கரை, இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். சர்க்கரை கரைந்து பாத்திரத்தில் ஒட்டாமல் வந்தவுடன் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
**சிறப்பு**
உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.�,