உதயநிதி, கீர்த்தியுடன் வடிவேலு பிறந்தநாள் கொண்டாட்டம்!

Uncategorized

சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்று கூடும் இடத்தில் ஊர்க்கதை, அரசியல் உரையாடல்கள் தவறாமல் இடம்பெறும்.

அதில் நான்காவது நபராக நடிகர் வடிவேல் காமெடி உரையாடல்கள் இடம்பெறுவது தமிழர்கள் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது.

நேற்றையதினம் வடிவேலுவின் 62வது பிறந்த நாளை அவரது மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினார்கள்.

Vadivelu birthday celebration

திரையுலகம், அரசியல்வாதிகள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர் .

சென்ற வருடம் நாய் சேகர் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய வடிவேலு, இந்த வருடம் தமிழ் சினிமாவில் தயாரிப்பு, விநியோகம், திரையிடல் என எல்லாவற்றிலும்” மாமன்னராக” ஆதிக்கம் செலுத்தி வரும்”ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின்” நடித்து தயாரித்து வரும் மாமன்னன் படப்பிடிப்பில் நேற்று மாலை பிறந்தநாளை கொண்டாடினார்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

நடிகர் வடிவேலு, பஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு தனது பிறந்தநாளை இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில், உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இராமானுஜம்

தமிழனின் வாழ்வியல் வடிவேலு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.