வாழை டூ ஸ்த்ரீ 2 : இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் என்னென்ன?

Published On:

| By christopher

vaazhai Two Women 2 : What are the OTT releases this week?

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையில் திரையரங்குகளிலும் ஓடிடி தளத்தில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் ரஜினி நடித்துள்ள வேட்டையன் முதல் மாரி செல்வராஜின் வாழை வரை 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது.

தியேட்டர்களில்…

ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானது.

இன்று ஜீவா நடித்துள்ள ‘பிளாக்’ (தமிழ்), கோபிசந்த் நடித்துள்ள ‘விஸ்வம்’ (தெலுங்கு), ஆலியா பட் நடித்துள்ள ‘ஜிக்ரா’ (இந்தி) பாலிவுட், துருவ் சார்ஜாவின் ‘மார்டின்’ (கன்னடம்) ஆகிய திரைப்படங்கள் இன்று தியேட்டர்களில் வெளியாகிறது.

ஓடிடியில் நேரடியாக…

எமிலி இயக்கத்தில் உருவான ‘கேர்ள் ஹான்ட் பாய்’ (Girl Haunts Boy) மற்றும் சுசன்னா இயக்கியுள்ள ‘லான்லி பிளானட்’ (Lonely Planet) ஆகிய இரண்டு ஹாலிவுட் திரைப்படங்களும் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகிறது.

மனநலன் குறித்து பேசும் இந்தி ஆந்தாலஜி ‘Zindaginama’ இணையத் தொடர் சோனி லிவ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

தியேட்டர் ரிலீஸுக்கு பிறகு ஓடிடியில்…

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல் நடிப்பில் உருவான ’வாழை’ திரைப்படம் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

மைக்கேல் கே. ராஜா எழுதி இயக்கத்தில் விமலின் நடிப்பில் வெளியான ‘போகுமிடம் வெகு தூரமில்லை’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான ’நந்தன்’ திரைப்படம்  அமேசான் ஓடிடி தளத்தில்  வெளியாகியுள்ளது.

இயக்குநர் சாஜி சலீம் இயக்கத்தில் விதார்த் நடித்து வெளியான ‘லாந்தர்’ திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ தமிழ் படத்தின் இந்தி ரீமேக்கான ‘சர்ஃபிரா’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவான ’படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தை சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வெளியான ’ரிபெல்’, சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தெலுங்கில் வெளியான ’சபரி’ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இது தவிர ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தி, மலையாளம், தெலுங்கு, ஹாலிவுட் படங்கள் இதோ!

டோலிவுட் – (தெலுங்கு)

உத்சவம் – அமேசான் பிரைம் வீடியோ

மதுவடலரா 2  – நெட்பிளிக்ஸ்

கோரே பூரணம் – ஆகா

டத்வா – ஈடிவிவின்

பைலம்பிள்ளகா – ஈடிவிவின்

மாலிவுட் – (மலையாளம்)

ஜெய் மகேந்திரன் – சோனிலிவ்

விவேகானந்தன் விரலனு – அமேசான் பிரைம் வீடியோ

பார்த்திபா டுடோரியல்ஸ் – சிம்பிளிசெளத்

பாலிவுட் – (இந்தி)

ஸ்த்ரீ 2 – அமேசான் பிரைம் வீடியோ

வேதா – ஜீ5

கேல்கேல்மெயின் –  நெட்பிளிக்ஸ்

பிடி சார் – அமேசான் பிரைம் வீடியோ

ராட் ஜவான் ஹாய் – சோனிலிவ்

ஹாலிவுட் – (ஆங்கிலம்)

ThePenguin HBO Originals (Ep – 3)  – ஜியோ சினிமா

DeceitfulLove சீசன் 1 – நெட்ஃபிளிக்ஸ்

Starting5  சீசன் 1 – நெட்ஃபிளிக்ஸ்

KillerCakes – அமேசான் பிரைம் வீடியோ

Teacup  – பீக்காக்

CaddoLake – ஹெச்.பி.ஓ மேக்ஸ்

CitadelDiana – அமேசான் பிரைம் வீடியோ

Sweetpea – ஸ்டார் இசட்

OuterBanks சீசன்4 – நெட்ஃபிளிக்ஸ்

AccusedSeason 2 – ஹுலு

LonelyPlanet – – நெட்ஃபிளிக்ஸ்

Uprising (கொரியா) – நெட்ஃபிளிக்ஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வரிப்பகிர்வு – உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி : தமிழ்நாட்டிற்கு?

பிக் பாஸ் சீசன் 8 : ஓரம் கட்டப்படுகிறாரா சவுந்தர்யா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel