இன்னைக்கு டீக்கடைக்கு போனதும், அங்க என் கூட ஸ்கூல்ல படிச்ச நண்பன் டீ குடிச்சிட்டு இருந்தான்… அவன பாத்த சந்தோசத்துல.. ‘மாப்ள இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?’னு கேட்டேன்.
அதுக்கு அவன் ‘நம்ம ஸ்கூல் மேக்ஸ் வாத்தியார் வீட்டுல பெயிண்ட் அடிக்குற கூலி வேலைக்கு போய்க்கிட்டு இருக்கேன்’னு சொன்னான்.
’ஏண்டா படிப்ப கத்துக்கொடுத்த வாத்தியார் வீட்டுலே கூலி வேலை பாக்குறியே என்ன நெனைப்பார்’னு கேட்டேன்.
அதுக்கு அவன், “அட போடா லண்டன்ல போய் படிச்சிட்டு வந்த என் தலைவனே, சாட்டையடிச்சிட்டு இருக்காரு… நான் கூலி வேல பாக்குறதுல என்ன தப்பு”னு கேட்டான் பாருங்க… அப்படியே ஷாக் ஆயிட்டேன்.
நீங்க அப்டேட் பாருங்க…

பலே பாலு
முக்கியமான நேரத்தில்
செயல்படாமல் இருக்கும்
கேமிராக்களுக்கு
‘கண்காணிப்பு கேமிரா’ என்று பெயர் ????

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஏன்னே நாதஸை அறைஞ்சீங்க..?
பின்ன என்னப்பா..? அண்ணாமலையை யாராவது சவுக்கால அடிக்க ஆசைப்பட்டா, பிஜேபி வெப்சைட்ல ஆன்லைன்ல பதிவு பண்ற ஆப்சன் எதாவது இருக்கான்னு கேட்கறாம்ப்பா..

எட்டப்பன்
இனிமே செருப்பு போட மாட்டேன்..
சரி, எல்லா இடத்துக்கும் போயிட்டு வர என்ன போக்குவரத்து பயன்படுத்துற..?
கார் தான்..

Sasikumar J
அது எப்படி திமிங்கலம் சாட்டையில் அடிச்சுக்க ஆரம்பிச்சதும் அவ்வளவு கரெக்டா வந்து தடுக்கவும் ஆள் நிப்பாட்டி வைக்க முடியுது…!

????????????????????????????
ஒரு விஷயத்தை எல்லா இடமும் பரப்ப வேண்டுமானால்
அதை ரகசியம் என்று சொன்னால் போதும்!!

மாஸ்டர் பீஸ்
அவங்களாம் பண்டிகைக்கு கேக் செஞ்சு அதை பண்டிகை முடிஞ்சு அடுத்த ரெண்டு மூனு நாளைக்கு மீதி கேக்க பிரிட்ஜ் வச்சு சாப்பிடுறாங்க
இங்கன பண்டிகை முடிஞ்ச அடுத்த ஒரு வாரத்துக்கு சாம்பாரு ரசம்னு முறுக்குனு…
மொதல்ல இங்கனவும் பண்டிகைக்கு டிஸ்ச மாத்தனும்…????????????

Azhagiri Sadhasivam
ஜெயலலிதா தன் தலை முடியை விரிச்சு போட்டு டிராமா பண்ணதும் அரசியல் தான்; பொதுக்கூட்ட மேடையில் சீமான் செருப்பை கழட்டி காட்டினதும் அரசியல் தான்; அண்ணாமலை சட்டை கழட்டிட்டு நிற்பதும் அரசியல் தான். அவரவர் தகுதிக்கேற்ப அவரவர் வித்தை அமைகிறது.

மயக்குநன்
“வரிக்குதிரை கேள்விப்பட்டுருக்கேன்… அது என்ன வரி ஆடு..?!”
“சாட்டையால் அடிச்சதுல உடம்புல விழுந்த வரிகள் பாஸ்..!”

நம்பி
சாட்டையால் அடித்து… உடம்பு முழுக்க சிவந்து போனதால்…
இனி ‘செம்மறி ஆடு’ என அன்போடு அழைக்கப்படுவாய்..!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
விடா முயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்: வைப் மோடில் அஜித் ரசிகர்கள்… ’சவதீகா’ என்றால் என்ன தெரியுமா?
‘ஒரு சிறந்த மனிதர், உண்மையான நண்பர்’ : மன்மோகன் சிங் மறைவுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி!