பாஜக ஆர்ப்பாட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம்!

Uncategorized தமிழகம்

கோவை சிவானந்தா காலனியில் பாஜக சார்பில் இன்று (செப்டம்பர் 26) மாலை திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவைக் கண்டித்தும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று போக்குவரத்து போலீசாரும், வாகன நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதில் ஆர்ப்பாட்டத்துக்கு வரும் வாகனங்கள் கீழ்க்கண்ட வழித்தடங்களில் வரும்படி போக்குவரத்து போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
அதில்,

ஈரோடு திருப்பூரிலிருந்து அவிநாசி சாலை வழியாக வரும் வாகனங்கள் சித்ரா சந்திப்பு -ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பு -நவஇந்திய சந்திப்பு வழியாக வலது புறம் திரும்பி 100 அடி சாலை, புதிய மேம்பாலத்தில் ஏறி 100 அடி சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆட்களை இறக்கி விட்டு லாரி பேட்டையில் சென்று வாகனங்களை நிறுத்தவும்.

பல்லடம் சூலூர் காங்கேயம் வழியாக திருச்சி சாலை வரும் வாகனங்கள் சிந்தாமணிபுதூர் எல்&டி பைபாஸ் வந்தடைந்து வலது புறமாக திரும்பி அவிநாசி சாலை – சித்ரா சந்திப்பு ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பு – நவ இந்தியா சந்திப்பு வழியாக வலது புறம் திரும்பி 100 அடி சாலை புதிய மேம்பாலத்தில் ஏறி 100 அடி சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆட்களை இறக்கிவிட்டு அழகப்பா செட்டி சாலையில் சென்று வாகனங்களை நிறுத்தவும்.

பாலக்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கோவைபுதூர் பிரிவு- கோவை புதூர் ஆசிரமம் பள்ளி சந்திப்பு- புட்டுவிக்கி சாலை -சேத்து மாவாய்க்கால் சோதனை சாவடி பேரூர் சாலை அசோக் நகர் ரவுண்டானா -செல்வபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பிலிருந்து வலது புறம் திரும்பி செட்டி வீதி – சாலிவன் வீதி – காந்தி பார்க் டிபி ரோடு – கவுலிபுரம் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து வடகோவை மேம்பாலம் மேல் ஏறி டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோடு சுப்பராயன் சாலை, வழியாக வந்து ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆட்களை இறக்கிவிட்டு பைக்காரா ஆபீஸ் சாலை வழியாக சென்று வாகனங்களை நிறுத்தவும்.

தடாகம் ரோடு வழியாக வரும் வாகனங்கள் ஜிசிடி பாரதி பார்க் ரோடு, அவிநாசிலிங்கம் கல்லூரியிலிருந்து வலது புறம் திரும்பி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆட்களை இறக்கிவிட்டு பைக்காரா ஆபீஸ் சாலை வழியாக சென்று வாகனங்களை நிறுத்தவும்.

மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் சங்கனூர் ரோடு கண்ணம்பாளையம் ஓபி – தயில் இட்டேரி சிவானந்தா காலனி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆட்களை இறக்கிவிட்டு பைக்கார ஆபீஸ் வழியாக சென்று வாகனங்களை நிறுத்தவும்.

சக்தி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் கணபதி ஜிபி சிக்னல் சந்திப்பு- கிராஸ்கட் சாலை 11 வது வீதி நூறடி சாலையில் சென்று ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆட்களை இறக்கிவிட்டு லாரி பேட்டையில் சென்று வாகனங்களை நிறுத்தவும்.

குனியமுத்தூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் சுண்ணாம்பு கால்வாய் சாலை – புட்டுவிக்கி ரோடு சந்திப்பு -சேத்துமா வாய்க்கால் சோதனை சாவடி – பேரூர் சாலை அசோக் நகர் ரவுண்டானா – செல்வபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பிலிருந்து வலதுபுறம் திரும்பி செட்டி வீதி -சாலிவன் வீதி – காந்தி பார்க் – டிபி ரோடு கவுலிப்புரம் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து வடகோவை மேம்பாலம் மேல் ஏறி டாக்டர் ராஜேந்திர பிரசாத் ரோடு – சுப்பராயன் சாலை வழியாக வந்து ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் இறக்கிவிட்டு பைக்கர் ஆபீஸ் சாலை வழியாக சென்று வாகனங்களை நிறுத்தவும்.

திருச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை – அவிநாசி சாலை ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பு – நவ இந்தியா சந்திப்பு வழியாக வலது புறம் திரும்பி 100 அடி சாலை புதிய மேம்பாலத்தில் ஏறி 100 அடி சாலை இறங்கி ஆர்ப்பாட்டம் நடக்கும் இடத்தில் ஆட்களை இறக்கிவிட்டு அழகப்பா செட்டி சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரியா

விழுப்புரத்தில் அண்ணா சிலை அவமதிப்பு!

“முழுநிலவாய் படப்பிடிப்பு தளத்தில் நுழைபவர்” : நந்தினி குறித்து சின்ன பழுவேட்டரையர்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *