சரியான நேரத்தில் சரியான தலைவர்… : மோடிக்கு புகழாரம் சூட்டிய சந்திரபாபு

Published On:

| By Kavi

சரியான நேரத்தில் சரியான தலைவரை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார் ஆந்திராவின் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு.

என்.டி.ஏ கூட்டணியில் வெற்றிபெற்ற அனைத்து எம்.பி.க்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டம் டெல்லியில் நாடாளுமன்றத்தில் இன்று (ஜூன் 7) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மோடியை என்.டி.ஏ தலைவராக முன்மொழிந்து பேசிய ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு, “பிரதமர் மோடிக்கு கூர்மையான தொலைநோக்கு பார்வை இருக்கிறது.

கொள்கைகள் அனைத்தையும் உண்மையான மனப்பான்மையுடன் நிறைவேற்றுகிறார். அவரது தலைமையிலான என்.டி.ஏ அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் சரியான தலைவர் மோடி. இந்தியாவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. நாம் இந்த முறை தவற விட்டிருந்தால் பிறகு என்றென்றும் இழக்க வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் இன்று நமக்கு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மோடி இந்தியாவை வளர்ச்சியடைய செய்வார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

ஒவ்வொரு நாளும் அவரை முழுமனதுடன் ஆதரிப்போம்” என்று கூறினார்.

முன்னதாக, ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 16 இடங்களில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது.

என்.டி.ஏ கூட்டணி ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ‘ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். நிதித் துறையின் கீழ் ஒரு இணை அமைச்சர், மூன்று கேபினட் இலாகாக்கள் மற்றும் மக்களவை சபாநாயகர் பதவி ஆகியவற்றை சந்திரபாபு நாயுடு கேட்டார்’ என்று கூறப்பட்டது.

இந்தசூழலில் ஒவ்வொரு நாளும் மோடியை ஆதரிப்போம் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”இப்போது வரும் தமிழ் படங்களின் தலைப்பால் வெட்கப்படுகிறேன்” : வைரமுத்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share