�சமைப்பவர்களின் கைப்பக்குவத்தில்தான் இருக்கிறது ருசியின் சூட்சுமம். இன்றைக்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று நினைப்பவர்கள், காய்கறிகள் சேர்க்காத இந்த ‘சும்மா குழம்பை’ வைக்கலாம். வீட்டிலுள்ளவர்களின் பாராட்டை அள்ளலாம்.
**என்ன தேவை?**
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 3 பல்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
**தாளிக்க **
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு.
**எப்படிச் செய்வது?**
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதில் புளிக்கரைசல், மஞ்சள்தூள் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு சாம்பார் பொடி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: தண்ணிக்குழம்பு!](https://minnambalam.com/public/2021/02/01/13/thannikulambu)�,