Share Market : எல்.ஐ.சி-யை முந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனம் மாஸ்டர் பிளான்!

Published On:

| By christopher

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தை உயர்வு காரணமாக இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் நேற்று புதன்கிழமை காலை தொடக்கத்தில் 77,543.22 என்ற புதிய உச்சத்தில் துவங்கிய சென்செக்ஸ் 77,851.63 என்ற புள்ளிகளுடன் புதிய வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது.

இதேபோல 23,629.85 புள்ளியில் தொடங்கிய நிஃப்டி அதன் புதிய சாதனையாக 23,664.00 புள்ளியைத் தொட்டு இந்திய பங்குச் சந்தையில் சாதனையைப் படைத்தது.

பிஎஸ்இ, என்எஸ்இ எப்படி?

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸில் ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய பங்குகள் அதிக லாபமும்,

டைட்டன், மாருதி சுசுகி இந்தியா, பார்தி ஏர்டெல், லார்சன் & டூப்ரோ மற்றும் என்டிபிசி பங்குகள் அதிக நட்டத்தையும் சந்தித்தன.

முறையே தேசிய பங்குச்சந்தை நிஃப்டியில் டைட்டன், மாருதி சுசுகி இந்தியா, பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோ மற்றும் பிபிசிஎல் பங்குகள் வீழ்ச்சியையும்,

ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் விலை உயர்ந்து அதிக லாபத்தையும் கொடுத்தன.

ஹூண்டாய் மோட்டாரின் ஐபிஓ!

இந்தியாவின் இரண்டாவது முண்ணனி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான IPO திட்டத்தை அறிவிக்க உள்ளது.

IPO திட்டம் மூலமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் வெளியிட்ட 21,000 கோடியை மிஞ்சும் வகையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய IPO நிதி திரட்டலில் ஈடுபட உள்ளது பங்குச் சந்தை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வார அடிப்படையில் Nocil, National Fertiliser, L&T Finance Holdings, Central Bank of India and Axis Bank நிறுவன பங்குகள் குறுகிய கால முதலீட்டுக்கு ஏற்றவை என்று பங்குச் சந்தை தரகர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

வியாழக்கிழமை வர்த்தகத்தில் State Bank of India, Infosys, Kotak Mahindra Bank, Adani Ports and Special Economic Zone Ltd, Carborundum Universal Ltd,PNB Housing, Tata Motors, ABFRL, Indian Oil, Som Distilleries, ACE, Brigade Enterprises, PNC Infratech, Godrej Group companies, Sun Pharma, TTK Prestige, Eimco Elecon, GMR Power, Gensol Engineering, KEI Industries, Blue Dart, MAS Financial, Aayush Wellness நிறுவன பங்குகள் தின வர்த்தகத்தில் கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 20 வியாழக்கிழமை காலை அமர்வில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்வுடனும் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து காலை முதல் அமர்வு தொடங்கியது.

வியாழக்கிழமை காலையில் கோடக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ லைஃப், எல் அண்ட் டி, பார்தி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்&எம் ஆகிய பங்குகள் அதிக லாபம் ஈட்டின.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

”கள்ளக்குறிச்சி விரைகிறேன்” : உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்கிறார் எடப்பாடி

குறைந்த வேகத்தில் இரட்டிப்பாக உயர்ந்த தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel