Share Market: Stock trading started with a record high!

Share Market : சாதனை உச்சத்துடன் தொடங்கிய இன்றைய பங்கு வர்த்தகம்!

Uncategorized

ஜூலை 1 திங்கள்கிழமை வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியுடுகள் சென்செக்ஸ் 443 புள்ளிகள் உயர்ந்து 79,476 என்கிற புதிய உச்சத்தில் முடிவடைந்தது. அதே சமயம் நிஃப்டி ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் லாபத்திற்கு ஏற்ப வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் உயர்வுடன் 24,100 புள்ளிகளுக்கு மேல் நிலைத்தது.

டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, டைட்டன் ஆகியவை நேற்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டின.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 பைசா சரிந்து 83.44 ஆக முடிந்தது.

தனியார் துறையைச் சேர்ந்த CSB வங்கி, ஜூன் 30, 2024 இல் முடிவடைந்த காலாண்டிற்கான இது முந்தைய காலாண்டு மற்றும் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது மொத்த வைப்பு மற்றும் மொத்த முன்னேற்றங்கள் ஆகிய இரண்டிலும் வலுவான வளர்ச்சியை அடைந்ததாக தெரிவித்துள்ளது. ஆனாலும் திங்கள்கிழமை வர்த்தகத்தில் இந்த வங்கியின் பங்கு BSE இல் 0.53% குறைந்து 378 ரூபாயாக முடிந்தது.

ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1.74 லட்சம் கோடியை ஈட்டியதாக மாதாந்திர தரவுகளை வெளியிட்டு நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் ஜிஎஸ்டி வசூல் தரவுகளை வெளியிடுவதை நிதி அமைச்சகம் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் தரவுகளை வெளியிடுவதை நிறுத்துவதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பஜாஜ் ஃபைனான்ஸ் பங்கு காலாண்டு வர்த்தகத்தை முன்னிட்டு 2% லாபத்துடன் முடிவடைந்தது.

ராஜஸ்தானை தளமாகக் கொண்ட துணை நிறுவனம் SJVN லிமிடெட் உடன் பவர் பர்சேஸ் ஒப்பந்தத்தில் (PPA) நுழைந்துள்ளதாக நிறுவனம் அறிவித்த பிறகு JSW எனர்ஜி லிமிடெட் பங்குகள் திங்களன்று 2% க்கு மேல் அதிகரித்தது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (IREDA), நிதி மற்றும் பிற சேவைகளை ஆதரிக்கும் பொதுத்துறை நிறுவனமானது ஜூன் முதல் காலாண்டில் 9,136 கோடி மதிப்பிலான கடன் வழங்கியுள்ளதாக பதிவு செய்துள்ளது.

Eicher Motors ஜூன் 2024 இல் 10.6 சதவிகிதம் வளர்ச்சியைப் பதிவு செய்து 7,424 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த இதே காலகட்டத்தில் விற்கப்பட்ட 6,715 யூனிட்களை ஒப்பிடுகையில் இது 10.6% வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை அமர்வில் இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகள் சாதனை உச்சத்துடன் தொடங்கப்பட்டன, நிஃப்டி குறியீடு 95 புள்ளிகள் உயர்ந்து 24,236 ஆகவும், பிஎஸ்இ சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்து 79,840 நிலைகளாகவும் இருந்தது.

காலை வர்த்தகத்தில் எச்சிஎல் டெக், பார்தி ஏர்டெல், டிசிஎஸ், எல்&டி, இன்ஃபோசிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் லாபம் கண்டன. அதிக லாபத்தை கொடுத்தது; டைட்டன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், சன் பார்மா, அல்ட்ராடெக் சிமென்ட் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்தது.

செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் கவனம் செலுத்தப்படும் பங்குகள் பட்டியலில் DCX Systems,IOL Chemicals,Carysil,NMDC உள்ளதாக பங்குச் சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

கமலை சந்தித்து நன்றி தெரிவித்த மனிஷா கொய்ராலா

ஆடி மாத இலவச ஆன்மிகப் பயணம் : மூத்த குடிமக்களுக்கு சேகர்பாபு அழைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *