நிலவில் அணு மின் நிலையம் … ரஷ்யாவுடன் சீனா, இந்தியா கைகோர்ப்பு!

Uncategorized உலகம்

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்.

ரஷ்யாவின் தூர கிழக்கு நகரமான விளாடிவோஸ்டாக் நகரில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் அணுசக்தி கழகமான ரோசாடோம் அமைப்பின் தலைவர் அலெக்சி லிகாசெவ் பேசுகையில், நிலவில் அரை மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அணுமின் நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், பல சர்வதேச விண்வெளி திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

2036-ம் ஆண்டுக்குள் இந்த அணுமின் நிலையம்  செயல்பாட்டுக்கு வரும் என்றும் ரஷ்யாவின் விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோஸ் கடந்த மே மாதம் அறிவித்திருந்த நிலையில், அலெக்சியின் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது. ரஷ்யாவும் சீனாவும் கூட்டாக உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கவுள்ளது. இந்த திட்டத்தில் இந்தியா மற்றும் சீனாவும் ரஷ்யாவுடன் கை கோர்த்துள்ளன.

இந்தியாவும் 2050 ஆண்டுக்குள் நிலவில் ஒரு ஆராய்ச்சி மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. அணு மின் நிலையத்தை அமைப்பதில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்தாமல் தானியங்கி முறையில் கட்டுமானம்  ஏற்படுத்தப்படும்.  இந்த திட்டத்துக்கான தொழில்நுட்பங்களும் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.

சந்திரனுக்கு அணு உலைகளை கொண்டு செல்வது, ராக்கெட் ஏவுதல் தோல்வியுற்றாலும் கூட, குறைந்தபட்ச கதிர்வீச்சு அபாயத்தையே ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர். உலைகள் அமைப்பதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் தானாகவே ரியாக்டர்கள்  செயல் இழக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

நிலவில் ஆராய்ச்சி மையம் அமைக்க மின்சாரம் மிகவும் அவசியமாகிறது. அங்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், 14 நாட்களுக்கு இரவுகள் மட்டுமே தொடரும். இதனால், அந்த சமயத்தில் சூரிய ஒளி கிடைக்காது. எனவேதான் அணு மின் நிலையம் அமைப்பது அவசியமாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

அரசியலில் நுழைந்து அமைச்சர் ஆகலாம்… ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியுமா? – வினேசுக்கு மாமா கேள்வி!

விசிக மாநாடு… அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *