வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். இதில் மாவுச்சத்து, கால்சியம் போன்ற சத்துகள் நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. வேர்க்கடலையிலிருந்து செய்யப்படும் பீநட் பட்டர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. டிபார்ட்மென்ட்டல் கடைகளில் கிடைக்கும் இந்த பீநட் பட்டரைப் பயன்படுத்தி ரிலாக்ஸ் டைமில் பீநட் பட்டர் ஹாட் மில்க் செய்து பருகுங்கள். புத்துணர்ச்சிப் பெறுங்கள்
**எப்படிச் செய்வது?**
வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலைப் பொடி இரண்டு டேபிள்ஸ்பூன், பீநட் பட்டர் இரண்டு டேபிள்ஸ்பூன், தேன் ஒரு டேபிள்ஸ்பூன், கோக்கோ பவுடர் ஒரு டீஸ்பூன். இவை அனைத்தையும் கெட்டியான ஒரு கப் சூடான பாலில் சேர்த்துக் கலக்கி ஓர் ஆற்று ஆற்றி மேலே சாக்கோ சிப்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் தூவிப் பருகவும்.
**சிறப்பு**
புரோட்டின், நார்ச்சத்து, ஆரோக்கிய கொழுப்பு, பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடண்ட், மெக்னீசியம் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ டி பி12 போன்ற சத்துகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.
�,