குழம்பு என்பது தமிழ்நாடு மற்றும் இலங்கையில் சமைக்கப்படும் பொதுவான உணவுப் பொருளாகும். இது பெரும்பாலும் புளித்தண்ணீர் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து செய்யப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை துவரம்பருப்பு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் துவரம்பருப்புக்குப் பதிலாக வேறு சில பருப்புகள் கொண்டும் செய்யப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் இந்த பாசிப்பயறு இளங்குழம்பு.
**என்ன தேவை?**
பாசிப்பயறு – அரை கப்
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
**தாளிக்க**
பட்டை – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 4 பல் (தட்டவும்)
கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு – தலா ஒரு டீஸ்பூன்.
**எப்படிச் செய்வது?**
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் பாசிப்பயறைச் சேர்த்து வாசனைவரும் வரை வறுத்து வேகவைத்து எடுக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். மற்றொரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, கொதிக்கும் குழம்புடன் சேர்த்து இறக்கவும்.
[நேற்றைய ரெசிப்பி: சும்மா குழம்பு!](https://minnambalam.com/health/2021/02/02/1/summa-kulambu)�,