திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர வாய்ப்பு! – கலெக்டர் அறிவிப்பு!

Published On:

| By christopher

Opportunity to join the Transgender Welfare Board as a member!

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்திற்கு இரண்டு புதிய அலுவல்சாரா உறுப்பினர்களாக சேர தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளித்து, அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் ‘தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் ”2008 ல் அமைக்கப்பட்டது.

மேற்படி அமைக்கப்பட்ட திருநங்கைகள் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களின் பதவிக் காலம் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து. வாரியத்தினைத் திருத்தி அமைத்து. 12 அலுவல்சாரா உறுப்பினர்களுடன், கூடுதலாக இடைபாலின நபர் ஒருவர் மற்றும் திருநம்பி ஒருவரையும் புதியதாக நியமனம் செய்திட திருநங்கைகள் நல வாரியக் கூட்டத்தின்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எனவே தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்திற்கு இரண்டு புதிய அலுவல்சாரா உறுப்பினர்களை தேர்வு செய்திட ஏதுவாக, சென்னை மாவட்டத்தில் சிறப்பாக சேவை செய்து வரும் தகுதியான திருநம்பி (Transman) மற்றும் இடைபாலின (Inter-Sex) நபர்கள் தங்களின் சுயவிவரக் குறிப்புடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை உடனடியாக அணுகலாம்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தவெக செயற்குழு கூட்டம் : விஜய் எடுத்த முக்கிய முடிவு!

சனாதன தர்மத்தை காக்க புதிய பிரிவு: பவன் கல்யாண் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel