புரட்டாசி பொறந்துடுச்சு… நவராத்திரியும் வந்துடுச்சு. இப்ப கொலு வைக்கிறது பல பேருக்கு ஃபேஷனாயிடுச்சு. அந்த வரிசையில நம்ம ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆளுநர் மாளிகையில கொலு வச்சிருக்குறாரு. கொலு கண்காட்சியையும் துவக்கி வச்சிருக்கிறாராம்.
கொலுவச்சி கும்பிடுற போட்டோவை ட்விட்டர்ல போட்டிருக்காரு. இதப் பத்தி நம்ம திராவிடப் பிஞ்சுகிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அந்தாளு ரொம்ப ஷார்ப்பா, ‘ஏண்ணே… எங்களைப் பொறுத்தவரைக்கும் ஆளுநரே ஒரு கொலு பொம்மைதானே…’னு சொல்லி சட்டுனு சப்ஜெக்ட்டை முடிச்சிட்டாப்ல.
நீங்க அப்டேட் பாருங்க….
சரவணன். 𝓜
விஜய், அஜித் ஒப்புக்கொண்டால் இருவரையும் வைத்து இயக்க தயாராக உள்ளேன்: இயக்குனர் வெங்கட்பிரபு
ரெண்டு பேரையும் போட்டு பிரியாணி பண்ணிட ஆசைப்படறீங்க, அதானே?

amudu
பிரதமர் மோடி அனைத்து தலைவர்களையும் அடிக்கடி சந்திக்க வேண்டும். -வெங்கய்ய நாயுடு.
அப்படியே… பத்திரிகை நிருபர்களை கண்டால் “ஓ மை காட்” ன்னு சொல்லிட்டு ஓடாமல், அவங்களையும் எப்போதாவது சந்திக்கச் சொல்லுங்க.

நாகராஜா சோழன் MA, MLA
பஞ்சு மிட்டாய் கேட்டு அடம்பிடித்த குழந்தைக்கு மட்டுமல்ல
வீதி வீதியாக விற்பவருக்கும் சேர்த்தே திட்டு கிடைத்தது
காசில்லாத அம்மாவிடம்!

ச ப் பா ணி
ரெடிமேட் ஷாப்களின் வரவினால்
வாழ்ந்து கெட்ட மனிதர்களாகி விட்டனர் டெய்லர்கள்

மயக்குநன்
அமமுக ஆட்சி அமைத்தால்தான் அதிமுகவை மீட்க முடியும்!- டிடிவி தினகரன்.
அதிமுகவை மீட்கிறது நடக்காத காரியம்னு நாசூக்கா சொல்றாரு போல..?!

ஈரோடு வேலு
ஒரு உதவி கேட்டா ஒரு “சோனு சூட் ” வரமாட்டான்…!!!
அட்வைஸ் பண்ண மட்டும் ஆயிரம் “சமுத்திரக்கனி” வந்து நிப்பாங்க

சரவணன். 𝓜
அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்ததாக வரும் தகவல் தவறானது: புகழேந்தி விளக்கம்.
அப்படின்னா இன்னும் உங்க கிட்டேயே தான் இருக்குங்களா?
Fihtal
“உழைப்பிற்கேற்ற பலன் இல்லையே” என்று கடவுளிடம் புலம்பினேன்.
“இது உன் போன ஜென்ம சோம்பேறித்தனத்திற்கான தண்டனை” என்றார்.
“போன ஜென்ம பாவத்திற்கு இந்த ஜென்மத்தில் தண்டிக்கும் உன் சோம்பேறித்தனத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்?” கடவுளை நோக்கி கேட்டேன்.
“இந்த வாய்க்கு உனக்கு அடுத்த ஜென்மத்திலும் தண்டனை இருக்கு” என்று சொல்லி மறைந்தார்.
லாக் ஆஃப்
தீபாவளிக்கு பெட்ரோல் பாமா? அப்டேட் குமாரு