ஜூன் 4 தேர்தல் ரிசல்ட்… ஜூன் 1ல் ஸ்டாலின் ப்ளான்!

Published On:

| By Kavi

ஜூன் 1ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், மக்களவை வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக இன்று (மே 28) பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, ஜூன் 4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசிக்க, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் வருகிற ஜூன் 1ஆம் தேதி காலை 11.00 மணி அளவில், காணொலி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். இந்த கூட்டத்தில் தவறாமல் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஜூன் 1ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின்  டெல்லி செல்கிறார்.

அதுபோன்று இன்று அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முகவர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்பது தொடர்பாகவும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்தார் எனவும் தகவல்கள் வருகின்றன.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“எங்களால் முடியாது” : கெஜ்ரிவால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள்!

எப்படி இருந்த துணை வேந்தர்கள் இப்படியாகி விட்டார்களே!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share