நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்களுக்கு அவரது மனைவி தீபிகா படுகோனேவின் ரியாக்ஷன் பற்றி பாலிவுட் முதல் கோலிவுட் வரை விவாதிக்கப்பட்டு வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. ரன்வீர் தனது வித்தியாசமான உடை அலங்காரத்துக்கும் துள்ளலான பேச்சுக்கும் பெயர் பெற்றவர். இவரது வித்தியாசமான ஃபோட்டோஷூட்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும்.
அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரன்வீர் நிர்வாணமாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அமெரிக்க பாப் கலாச்சாரத்தின் அடையாளமாக கருதப்படும் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ்க்கு இந்த புகைப்படங்களை சமர்ப்பிப்பதாகவும் ரன்வீர் கூறி இருந்தார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்த அதே சமயம் சலசலப்பையும் ஏற்படுத்தியது. ரன்வீர் இப்படி புகைப்படங்கள் எடுக்க அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா எப்படி அனுமதித்தார் எனவும் இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் ரன்வீர், தீபிகா இருவருக்கும் நெருக்கமான சிலர், “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆரம்பத்தில் இருந்தே இந்த கான்செப்ட் தீபிகாவுக்கு பிடித்திருந்தது. இந்த ஃபோட்டோஷூட்டில் அவர் ஆர்வம் காட்டி வந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் முன்னரே தீபிகா பார்த்து விட்டார்.அவருக்கும் பிடித்து இருந்தது. ரன்வீர் வித்தியாசமான முயற்சிகள் செய்ய விரும்பினால் தீபிகா அதை ஆதரிப்பாரே தவிர்த்து எப்போதும் தடை சொல்லியதே கிடையாது. அப்படி தான் இதுவும்” என்கிறார்கள்.
அதே போல, இந்த புகைப்படங்கள் குறித்தான கேள்விக்கு பத்திரிக்கை ஒன்றிற்கு ரன்வீர் அளித்துள்ள பதில், “எனக்கு நிர்வாணமாக நிற்பது என்பது எளிது. நம் உடல் மட்டுமல்ல எல்லாருடைய ஆன்மாவும் நிர்வாணமாக தான் இருக்கிறது. அது தான் உண்மை. நான் ஆயிரம் பேருக்கு முன்னால் நிர்வாணமாக நிற்க முடியும். ஆனால், எதிரில் இருப்பவர்கள் தான் அசெளகரியமாக உணர்வார்கள்” என்று கூறியுள்ளார்.
–ஆதிரா