Tரிலாக்ஸ் டைம் : வாழைப்பழப் பால்!

Published On:

| By Balaji

தற்போதைய நிலையில் விலை மலிவாகக் கிடைக்கின்றன வாழைப்பழங்கள். ஆனால், சிலர் வாழைப்பழத்தை வெறுப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வாழைப்பழப் பால் செய்து கொடுங்கள். விரும்பி அருந்துவார்கள்; புத்துணர்ச்சி பெறுவார்கள்.

**எப்படிச் செய்வது?**

நன்கு கனிந்த இரண்டு வாழைப்பழத்தைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு லிட்டர் பாலை நன்றாகக் கொதிக்கவைத்து பால் அரை லிட்டராகச் சுண்டியதும் இதில் நாட்டு சர்க்கரை அல்லது தேனை தேவையான அளவு சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் பைனாப்பிள் எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வாழைப்பழத்தை கலந்து பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.

**சிறப்பு**

ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். இதிலுள்ள அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share